பாட்னா: பீகாரில் நடைபெற்ற தேர்தலில்,  தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், முதல்வரை தேர்வு செய்ய  தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று கூடுகிறது.

பீகாரில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக NDA கட்சி உறுப்பினர்களிடையே அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. NDA கூட்டணி உறுப்பினர்களிடையே கலந்துரையாடல்கள் மற்றும் தொடர் கூட்டங்கள் பாட்னா மற்றும்  டெல்லி ல்லியில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அமைச்சரவை அமைப்பு மற்றும் அமைச்சரவையில் பல்வேறு தொகுதி கட்சிகளுக்கான பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில்,   இன்று பீகார் தலைநகர் பாட்னாவில்,  பீகாரில் புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்ய தே.ஜ. கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்  கூடுகிறது. இதில் புதிய முதல்வராக ஏற்கனவே இருந்து வரும், நிதிஷ்குமாரே தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், பாஜக சார்பிலும்

சட்டப் பேரவைக் கட்சித் தலைவராக நிதீஷ் குமார் தேர்வாக வாய்ப்பு உள்ளதாகவும், நிதீஷ் குமார் தலைமையில் புதிய அமைச்சரவை வரும் 19 அல்லது 20ம் தேதி பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக பீகாரில்  மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு, கடந்த 6 மற்றும் 11ல் இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. பல ஆண்டுகளுக்கு பின், அதிகபட்சமாக 67 சதவீத ஓட்டுகள் பதிவாகின. மேலும், ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகளவில் ஓட்டளித்தனர்.

இந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கும், காங்., – ராஷ்ட்ரீய ஜனதா தளம் அடங்கிய, ‘மஹாகட்பந்தன்’ கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தேர்தல் களத்தில் குதித்ததால், பிரசாரம் அனல் பறந்தது.

தே.ஜ., கூட்டணியின் கீழ், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி ராம்விலாஸ், மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஜ்யசபா எம்.பி., உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா ஆகியவை தேர்தலை சந்தித்தன. பா.ஜ., மற்றும் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலா, 101 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், லோக் ஜனசக்தி, 29ல் களமிறங்கியது.

மஹாகட்பந்தன் கூட்டணியில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 143; காங்., 61 தொகுதிகளில் போட்டியிட்டன.

ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவை என்ற நிலையில், மொத்தமுள்ள 243 தொகுதிகளில், தே.ஜ., கூட்டணி, 202ல் அபார வெற்றி பெற்றுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி இதுவரை இல்லாத அளவில் 89 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. நிதிஷ்குமார் ஜனதா தளம் 85 தொகுதிகளை கைப்பற்றி உள்ளன.

லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம்  143 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில்  25 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. அதுபோல  61தொகுதிகளில் களமிறங்கிய காங்கிரஸ் கட்சி வெறும் 6 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி பெரும் சேதங்களை சந்தித்துள்ளது.  பெரும் தோல்வி காரணமாக,    எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கத நிலையில், மகாபந்தன் கூட்டணி உள்ளது.

இந்த நிலையில்,  மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் சட்டமன்ற கட்சி தலைவர் தேர்வு செய்யும் பணி இன்று நடைபெறுகிறது.