சிவகாசி:  நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில்  களமிறங்கிய தேமுதிக தலைவர் விஜய பிரபாகரன் தோல்விக்கு அதிமுகதான் காரணம் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தங்களது கவனக்குறைவால்தான் அவரது வெற்றி பாதிக்கப்பட்டுள்ளது பின்னரே தெரிய வந்தது என்றும் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுக வடக்கு ஒன்றிய பாக முகவர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய  முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,  விருதுநகர் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு வாகன வசதியை நாம் செய்து கொடுக்காமல் விட்டதால் சுமார் 7 ஆயிரம் வாக்குகள் பதிவாகாமல் போனது என்றவர், இதுவே விஜயபிரபாகரனின் தோல்விக்கு காரணம் என்றவர்,  அநத  7 ஆயிரம் வாக்குகள் பதிவாகியிருந்தால் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பார். வெற்றியை கோட்டை விட்டு விட்டோம் என்றவர்,   50 ஆயிரம் முதல் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற மமதையில் இருந்துவிட்டோம். அதுபோல் எப்போதும் இருக்க கூடாது என்பதற்கு கடந்த நாடாளுமன்ற தேர்தல் நமக்கு ஒரு படிப்பினை. கவனமாக இருந்திருந்தால் விஜயபிரபாகரன் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றிருப்பார். அவரை அனுப்பி வைத்த பெருமையை நாம் பெற்றிருப்போம்.

அதனால்,  வரும் சட்டமன்ற தேர்தலில் கவனமாக செயல்பட வேண்டும் என கூறினார்.