சென்னை: சென்னையின் முக்கிய நீர்வழி ஆதாரமான பக்கிங்காம் கால்வாய் தூர்வாரும் பணிகள் ரூ.31 கோடி செலவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பருவமழை காலம் என்பதால்,  தூர்வாரும் பணிகள் வேகம் வேகமாக நடைபெற்று வருகிறது.

சென்னையின் முக்கியமான நீர் வழித் தடங்களில் ஒன்றான பக்கிங்காம் கால்வாய், 7.3 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. தற்போது, இதனை தூர்வாரி அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது, இதற்காக ரூ.31 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 6.50 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரும் பணி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து,  பக்கிங்காம் கால்வாயின் காரையோரம்,  நச்சுக்களை அகற்ற தாவரங்களை நட முடிவு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பக்கிங்காம் கால்வாய் ஒரு காலத்தில்  சென்னையின் போக்குவரத்து மற்றும் நீர் ஆதாரமாக இருந்தது, ஆனால் இப்போது பெரும்பாலும் கழிவுநீரை சுமந்து செல்லும் பாதையாக, அதாவது சாக்கடையாக  மாறிவிட்டது.  பஞ்ச காலத்தில் மக்களுக்கு வேலை வழங்கவும், நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்தவும் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இந்த கால்வாய்  மாறாக மனிதனால் உருவாக்கப்பட்ட கால்வாய் ஆகும். ஆனால், தற்போது, இந்த கால்வாயின் பெரும் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, குடிசைகளாகவும், வீடுகளாகவும் மாற்றப்பட்டு, மக்கள் குடியிருக்கும் பகுதிகளாக மாற்றப்பட்டு உள்ளன. இதனான் காரணமாக நீர்வழி போக்குவரத்து கால்வாயா பக்கிங்காம் கால்வாய்,   இயற்கை சீற்றங்கள் மற்றும் மழை காலங்களில், பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது.  இதனால் காரணமாக சென்னை மக்கள் ஆண்டுதோறும் மழைகாலத்தின்போது தண்ணீரில் தத்தளிப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

இதையடுத்து கால்வாயை சுத்தப்படுத்தவும், அதில்  கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். ஆட்சியாளர்களும், அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறி கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கீடு செய்தாலும் இன்றுவரை பக்கிங்காம் கால்வாய் சாக்கடையாகவே காட்சி அளிக்கிறது.

இந்த நிலையில், 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பக்கிங்காங் கால்வாய் தூர்வாரப்பட்டு, நீர்வழி சரி செய்யப்படும் என அறிவித்தது. ஆனால், ஆட்சி நடைபெற்று 4 ஆண்டுகள் முடிந்த நிலையில், தற்போதுதான் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னையில் உள்ள பக்கிங்காம் கால்வாயானது,  ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தமிழகத்தின் கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை வரை செல்கிறது. பின்னர்  சென்னையில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக எண்ணூரில் இருந்து அடையாறு வரை பக்கிங்காம் கால்வாய் நீட்டிக்கப்பட்டது. பின்னர் அது விழுப்புரம் வரை நீட்டிக்கப்பட்டு நீர்வழி வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்பட்டது என வரலாறுகள் கூறுகின்றன. உலகிலேயே ஒரே இடத்தில் நீர்வழி, நிலவழி, ரயில்வழிப் பாதை அமைக்கப்பட்ட இடமாக சென்னை சென்ட்ரல் பகுதி இருந்தது.  அதனால்,  புலிக்காடு, ஸ்ரீஹரிகோட்டா காட்டில் இருந்து, பக்கிங்காம் கால்வாய் வழியாக சென்னைக்கு விறகு மற்றும் கரி கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இதன் முழு நீளம் சுமார் 796 கிலோ மீட்டராகும். பழவேற்காடு ஏரி முதல் கூவம் ஆறு கலக்கும் இடம் வரையிலான சுமார் 58 கி.மீ. நீளம் வடக்கு பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆறும் அடையாறு ஆறும் கலக்கும் இடத்திற்கு இடையேயான 7.2 கி.மீ. நீளப் பகுதி மத்திய பக்கிங்காம் கால்வாய் மற்றும் அடையாறு ஆறு முதல் மரக்காணம் வரையிலான சுமார் 102 கி.மீ. நீளத்திற்கு தெற்கு பக்கிங்காம் கால்வாய் என அழைக்கப்படுகிறது.

இந்த பக்கிங்காம் கால்வாயில் தூர்வாரும் பணிகள் ரூ.31 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், 6.50 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரும் பணி நிறைவடைந்துள்ளது என அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஆனால், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதா என்பதுகேள்விக்குறியாகத்தான் உள்ளது. இதையடுத்து,   கால்வாயில் உள்ள நச்சு மற்றும் கழிவுகளை அகற்ற அதற்கான தாவரங்களை நடும் பணி விரைவில் தொடங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள்,  . இது, கால்வாயின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நகரின் வெள்ள பாதிப்புகளை குறைக்கவும் உதவும். கால்வாய்க்கு நடுவில் பாலங்கள் உள்ள இடங்களில், கற்கள் பதிக்கப்பட்டு, புற்கள் மற்றும் தாவரங்கள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது, கால்வாயின் அழகை மேம்படுத்துவதோடு, அதன் சுற்றுச்சூழல் நலனையும் பாதுகாக்கும். இது, கால்வாயை ஒரு பொதுவெளி அல்லது பொழுதுபோக்கு இடமாக மாற்றுவதற்கும் உதவும் என கூறும் அதிகாரிகள்,  கால்வாயை தூர் வாரி, அதன் வெள்ள நீரைத் தாங்கும் திறனை மேம்படுத்தி, மக்களை மழைக்காலங்களில் காப்பாற்றும் நோக்கில் செயல்படுத்தும் நோக்கில் நடைபெற்று வருகிறது என்றும்,   அ திட்டத்தின் நீடித்த தன்மை மற்றும் பரந்த அளவிலான பயன்பாடு குறித்து இன்னும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தால், சென்னையின் மழைக்கால பாதிப்புகளை குறைக்கும் முக்கியமான பங்களிப்பாக அமையும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.