கரும்பு கொள்முதல் விலையை ரூ. 3500ஆக உயர்த்த வேண்டும் என்று கர்நாடக கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

சர்க்கரை ஆலைகள் இதற்கு இணங்க மறுத்ததை அடுத்து டன்னுக்கு ரூ. 50 உயர்த்தி ரூ. 3300ஆக வழங்க மாநில அரசு முன் வந்தது.

ஆனால் கரும்பிலிருந்து எடுக்கக்கூடிய சர்க்கரையின் அளவு விகிதத்தை 10.25% வீதத்தில் இருந்து 11.25% வீதமாக உயர்த்தியதால் மொத்தத்தில் கரும்பு விவசாயிகளுக்கு தற்போதுள்ள விலையும் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

இதனால் கரும்புடன் வந்த 200க்கும் மேற்பட்ட டிராக்டர்களை ஆலைக்கு வெளியே நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

இந்த டிராக்டர்களை சமூக விரோதிகள் சிலர் தீவைத்து கொளுத்தினர்.

இந்த நிலையில் டிராக்டர் மற்றும் கரும்பு ஆகியவற்றுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இந்த சம்பவத்திற்கு மத்திய, மாநில அரசு மற்றும் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் தான் முழு பொறுப்பு என்றும் விவசாய சங்க தலைவர்கள் கூறியுள்ளனர்.