பாட்னா: பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு, இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தேசிய ஜனநாயககூட்டணி முன்னணியில் இருந்து வருகிறது.

பீகாரில், நடைபெற்று முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 46 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவை.
இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகளை தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும்பணியும் தொடங்கியுள்ளது. அதில் ஆளுங்கட்சி கூட்டணிக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கமாக, பாஜக-ஜேடியு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
பெரும்பான்மைக்கு தேவையான 122 தொகுதிகளை காட்டிலும், கூடுதலான இடங்களில் அந்த கூட்டணி முன்னிலை வகிக்கிறது. தேர்தல் முடிவுகளில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியுடன் கடும் இழுபறி நிலவும் என கூறப்பட்ட நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆரம்பத்திலேயே ஒரு முன்னிலை கிடைத்துள்ளது.
பாஜக 73 இடத்திலும், நிதிஷ்குமாரின்ஜேடியு 77 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ள நிலையில், ஆர்ஜேடி கட்சி 42 இடங்களிலும் முன்னணியில் உள்ளது.
காலை 9:30 மணி நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பகால போக்குகள், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மையை தாண்டியதைக் காட்டியது, என்.டி.டிவி வெளியிட்ட தகவலின் படி. என்.டி.ஏ 146 இடங்களிலும், மகாகத்பந்தன் 73 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. மொகாமாவில் ஜெ.டி.யூ கட்சியின் அனந்த் சிங் இன்னும் முன்னிலை வகிக்கிறார், அதே நேரத்தில் சிவனில் பா.ஜ.க.வின் மங்கள் பாண்டே பின்தங்கியுள்ளார். ரகுநாத்பூரில் முகமது சஹாபுதீனின் மகனும் ஆர்ஜேடி வேட்பாளருமான ஒசாமா ஷஹாப் முன்னிலையில் இருந்தார்.
தற்போது 10மணி அளவில், பெரும்பாலான இடங்களில் பாஜக கூட்டணியே முன்னிலையில் உள்ளது.
ஜனதா தளம் (யுனைடெட்) – ஜேடி(யு) 79 தொகுதிகளில் முன்னிலை
பாரதிய ஜனதா கட்சி – BJP 74 தொகுதிகளில் முன்னிலை
ராஷ்ட்ரிய ஜனதா தளம் – RJD 40 தொகுதிகளில் முன்னிலை
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) – LJPRV 19 தொகுதிகளில் முன்னிலை
இந்திய தேசிய காங்கிரஸ் – INC 6 தொகுதிகளில் முன்னிலை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (விடுதலை) – சிபிஐ(எம்எல்)(எல்) 5 தொகுதிகளில் முன்னிலை
இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) – HAMS 4 தொகுதிகளில் முன்னிலை
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் – AIMIM 2 தொகுதிகளில் முன்னிலை
ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா – RSHTLKM 1 தொகுதியில் முன்னிலை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – சிபிஐ(எம்) 1 தொகுதியில் முன்னிலை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – CPI – 1 தொகுதியில் முன்னிலை
பகுஜன் சமாஜ் கட்சி – பகுஜன் சமாஜ் கட்சி 1 தொகுதியில் முன்னிலை