டெல்லி:  காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விரிவான  திட்ட அறிக்கை தயார் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு  தமிழ்நாடு அரசின்  கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இது தமிழக விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பதற்காக மத்திய நீர் ஆணையம் (CWC) பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழகம் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி கே. வினோத் சந்திரன் மற்றும் நீதிபதி என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு , விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக மாநிலஅரசுக்கு அனுமதி வழங்கியது.

திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தில், மாநில அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதை மீறி,அணை கட்டுவதற்கான ஒப்புதல் பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்தஅணை கட்டினால், தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி நீர் தடுக்கப்பட்டு விடும். இதனால் டெல்டா விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால், தமிழக அரசு இதற்கு எதிர்ப்புதெரிவித்து வருகிறது.

இந்த விவகாரத்தில், தமிழ்நாடு முதல்வர்  ஸ்டாலின் கூட்டணி கட்சி கலைவரான ராகுல்காந்தியுடன் பேசி, கர்நாடக மாநில காங்கிரஸ் அரிசிடம் பேசலாம் என அரசியல் ஆலோசகர்கள் கூறி வரும் நிலையில், திமுக அரசோ, அதை கண்டுகொள்ளாமல் நீதிமன்றத்தை நாடி வருகிறது,

இதற்கிடையில், மேகதாது அணை கட்ட ஒப்புதல் அளிக்கக் கோரி கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு  இன்று (நவம்பர் 13ந்தேதி) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது; தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்; மேகதாது அணை கட்ட நதிநீர் ஆணையம் ஒப்புதல் தர முடியாது. காவிரியில் போதுமான அணைகள் இருப்பதால் புதிதாக அணை தேவையில்லை. காவிரியில் குறுக்கே புதிதாக அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு வரும் 80 டிஎம்சி தண்ணீர் தடுக்கப்படும் என்றும், இதனால் தமிழக விவசாயம் கடுமையாக பாதிககப்படும் என்று கூறினார்.

மேலும், ஏற்கனவே பலமுறை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் பல நேரங்களில் காவிரியில் தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடகா இருந்திருக்கிறது. அப்படி இருக்கும்போது, தற்போது வழங்கப்பட்டு வரும்  80 டிஎம்சி நீரை தடுக்கவே கர்நாடகா  அரசு மேகதாது பகுதியில் புதிதாக அணை கட்ட முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க நடுவர் மன்றம் மட்டுமே ஒப்புதல் தர முடியும். மேகதாது அணை கட்டப்பட்டால் லட்சக்கணக்கான தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆரம்ப கட்டத்திலேயே தடை விதிக்க வேண்டும்.

கபினி, கேஆர்எஸ் அணையில் இருந்து வரும் உபரி நீர் புதிய அணை கட்டினால் தடுக்கப்படும். 50 ஆண்டுகளாக காவிரி நீருக்காக போராடுகிறோம்; மேகதாது அணை கட்டினால் நிச்சயம் எங்களுக்கு நீர் கிடைக்காது என்று தெரிவித்தது.  நீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடகா செயல்படுத்தாததால்தான் தமிழ்நாடு நீதிமன்றத்தை நாடுகிறது. மேகதாது அணை பிரச்சனையில் உச்ச நீதிமன்றம்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று வாதிட்டார்.

அதுபோல கர்நாடக அரசு,  மேகதாது அணை திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி அரசுகள் உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது.

வாதங்களை   தொடர்ந்து தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை மீறி மேகதாது அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேகதாது அணை கட்டுமானத்திற்கு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகா அனுமதி கோருவதை எதிர்த்து தமிழ்நாடு கூறும் அம்சங்கள் அனைத்தும் மிகவும் ஆரம்ப கட்டமானது என்று விமர்சித்த தலைமை நீதிபதி,

கர்நாடக மாநில அரசு மேகதாதுஅணை கட்டுவதற்கான விரிவான , திட்ட அறிக்கை தயார் செய்து,  மத்திய நீர் ஆணையத்திடம் வழங்கும் போது, இந்ததிட்டம் குறித்து, மத்திய நீர் ஆணையம்  தமிழ்நாடு அரசு, காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றிடம் கருத்து கேட்ட பிறகே முடிவு எடுக்க வேண்டும்  என்று கூறியது. மேலும், . காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தர விட்டது.

மேகதாது பணிகளை உடனே தொடங்க தயாராக இருக்கிறோம்! கர்நாடக முதல்வர் சித்தராமையா

மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக காங்கிரஸ் அரசு தீவிரம்! 29 வனஅதிகாரிகள் நியமனம்