சென்னை: மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, தேவைப்படும் கூடுதல் பணியாளர்களை 90 நாட்களுக்குள் பணியில் அமர்த்த தமிழ்நாடு மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஜனவரி 30ந்தேதி வரை பணியாளர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த காலம் அக்டோபர் மாதமே தொடங்கி உள்ள நிலையில், இது டிசம்பர் வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டிற்கும், இந்தியத் தீபகற்பத்தின் பிற பகுதிகளுக்கும் கணிசமான மழை பெய்கிறது. தமிழ்நாட்டில், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கும். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதங்களை கடந்துள்ளது.
இந்த நிலையில், மழைக்காலங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் பணியாளர்களை நியமிக்க, அதுவும் ஜனவரி 30ந்தேதி (பருவமழை காலம் முடிந்த பிறகும்) பணியாளர்களை அமர்த்த தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழைத் பெய்து வரும் நிலையில், மழைக்காலங்களில் ஏற்படும் மின் தடை பிரச்னைகளைச் சரி செய்ய, மழைக்காலங்களில் கூடுதல் பணியாளர்களை பணியில் அமர்த்த அனுமதி அளித்து மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழைத் பெய்து வரும் நிலையில், மழைக்காலங்களில் ஏற்படும் மின் தடை பிரச்னைகளைச் சரி செய்ய, மழைக்காலங்களில் கூடுதல் பணியாளர்களை பணியில் அமர்த்த அனுமதி அளித்து மின்சார வாரியம் புதன்கிழமை (நவம்பர் 12ந்தேதி) உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பரவலாகப் பெய்து வருகிறது. அதனால், எதிர்பாராத நிலையில், மின் தடை ஏற்பட்டால் உடனடியாக சீர் செய்யவும் தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய நிலையில், தமிழ்நாடு முழுவதும் அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உட்பட 5,580 பேர் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர். இது போதாது என்பதால், மழைக்காலங்களில் கூடுதல் பணியாளர்களை பணியில் அமர்த்த அனுமதி அளித்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மழைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படும் வட்டங்களில் பிரிவுக்கு 4 பேரும், மற்ற வட்டங்களில் பிரிவுக்கு 2 பேரையும் பணியில் அமர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொருஅலுவலகங்களிலுல் 6 பேரை பணியமர்த்த அனுமதி வழங்கி உள்ளது. இந்த பணி நியமனத்திறகான காலம் ஜனவரி 30, 2026 வரை. அதாவது இன்றுமுதல் 90 நாட்களுக்கு பணியில் அமர்த்தி கொள்ள மண்டல தலைமை பொறியாளர்களுக்கு அனுமதி அளித்து மின்சார வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.