சென்னை: ‘SIR-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை என தனது சமூக வலைதள பக்கமான எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் ஸ்டாலின், நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை ‘SIR-ஐத் தடுப்பதே என குறிப்பிட்டுள்ளார.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், #SIR-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை! \ ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் #SIR எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டம் – களப் போராட்டம் – மறுபுறம், தொடங்கப்பட்டுவிட்ட #SIR பணிகளில் குளறுபடிகளைத் தடுத்திட #WarRoom #Helpline – களப் போராட்டத்தில்,
இன்று தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தியும் – கண்டன முழக்கங்களை எழுப்பியும்
#SIR எனும் பேராபத்துக்கு எதிராகக் கூடியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்! தொடர்ந்து செயலாற்றுவோம்!
நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம்!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.