சென்னை : பெண்கள் பாதுகாப்புக்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.12 கோடியில் வாங்கப்பட்டுள்ள 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகன சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இனறு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு, பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே பெண்களின் வாழ்வாதாரத்துக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருவதுடன், பணிக்கு செல்லும் பெண்களுக்க தோழி விடுதி, மேல்நிலை, கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு இலவச கல்வி கட்டணம் உடன் மாதா மாதம் இலவசமாக பணமும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பெண்கள் பாதுகாப்புக்காக ரூ.12 கோடியில் 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் வாங்கப்பட்டுஉள்ளது. இந்த வாகன சேவையை இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தின்போது ( 2019) அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக, “அம்மா ரோந்து” என்ற பெயரில் பிங்க் நிற ரோந்து வாகனங்களை அறிமுகப்படுத்தினார். 2019 ஆகஸ்ட் மாதம் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், இந்த ரோந்து வாகனங்கள் திடீரென காணாமல் போனது. தற்போது திமுக அரசு மீண்டும் பிங் வாகனங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.