மும்பை:  பிரபல பாலிவுட்  நடிகர் தர்மேந்திரா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 89.

 இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 89. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் மும்பையில் உள்ள  பிரிச்கேன்டி தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு.  சிகிச்சை பெற்று வந்தார். இதனை தொடர்ந்து, நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் நேற்று தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், நடிகர் தர்மேந்திரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தர்மேந்திராவின் 2-வது மனைவி ஹேமாமாலினி. தர்மேந்திராவின் மகன்கள் சன்னிதியோல், பாபி தியோல், மகள் ஈஷா தியோல் ஆகியோர்  அவருடன் உள்ளனர்.

திரை உலகில் பிரபலமாக இருந்து வந்த மூத்தர நடிகர் தர்மேந்திராவின் து மறைவால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் தர்மேந்திராவின் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.