திருச்சி: புதுக்கோட்டை மாவட்டத்தில்  நடத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த முதல்வர்  ஸ்டாலின் அம்மாவட்டத்துக்கு தேவையான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் இன்று கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,. புதுக்கோட்டையில்,  ரூ.767 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் , மேலும் மூத்த குடிமக்களுக்கான அன்புசோலை திட்டத்தையும் திருச்சியில் இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்த நிலையில், இன்று முற்பகல் திருச்சியில் நடைபெற்று வரும் முதல்வர் ஸ்டாலின்,  புதுக்கோட்டை மாவட்டத்தில்  ரூ.767 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து,  பயனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ,  புதுக்கோட்டை மாவட்டத்துக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

1) அறந்தாங்கி வட்டத்தில் இருக்கக்கூடிய வீரகொண்டான் ஏரி, செங்கழுநீர் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ. 15 கோடி செலவில் புணரமைக்கப்படும்.

2) கீரமங்களம் பகுதி விவசாயிகளின் நலன்கருதி அப்பகுதியில் சாகுபடி செய்யப்படும். காய்கறி, பழங்களை பாதுகாப்பாக இருப்பு வைத்திட குளிர்பதன கிடங்கு ரூ. 1.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். *

3) வடகாடு ஊராட்சியில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் உயர் நிலை பாலங்கள் கட்டப்படும்.

4) புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதுக்கோட்டையில் நியோ டைடல் பார்க் அமைக்கப்படும்.

5) கந்தவர்வகோட்டை ஊராட்சி, பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

56) பொன்னமராவதி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றார்.