பாட்னா: பீஹார் சட்டப்பேரவைக்கு நேற்று  (நவம்பர் 6) நடைபெற்று முடிந்த முதற்கட்ட தேர்தலில், 64.66%  வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இது கடந்த  25 ஆண்டுகளில் முதன்முறை என இந்திய  தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இதுவே அதிகமான வாக்குப்பதிவு என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

எஸ்ஐஆர் சர்ச்சைகளுக்கு இடையே பீகாரில் முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பபாக நடைபெற்றது. 18 மாவட்டங்களை சேர்ந்த    121 தொகுதிகளில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு  மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.  இந்  121 தொகுதிகளில் மொத்தம் 1,314 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக சுமார்  90 ஆயிரத்து 712 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்புடன் எந்தவித பிரச்சினையுமின்றி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இந்த  முதற்கட்ட தேர்தலில்  மாலை 5 மணி நிலவரப்படி பீகாரில் 60.1 % வாக்குகள் பதிவுவான நிலையில், இறுதியில், 64.66% ஓட்டுப்பதிவு நடைபெற்றுள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பீகார் தேர்தல் 2025: முதல் கட்ட வாக்குப்பதிவு 64.6% வாக்குப்பதிவுடன் முடிந்தது. இந்த  85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள்   வாக்களித்தனர். தேர்தல் வாக்குப்பதிவை, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோருடன் சேர்ந்து, நேரடி வலை ஒளிபரப்பு மூலம்  உன்னிப்பாகக் கண்காணித்தனர் என்றும், இந்ததடவைதான் பீகாரில் முதல் முறையாக 100% வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு  உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

“தேர்தல் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, தேர்தல் கட்டுப்பாட்டு அறையைச் சேர்ந்த தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டார்” என்று ம்  செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு குறித்து கூறிய மாநில தலைமை தேர்தல் அதிகாரி வினோத் குஞ்சால் , வாக்குப்பதிவு தொடர்பாக 143 புகார்கள் பெறப்பட்டதாகவும், , அவை அனைத்தும் சரியான நேரத்தில் தீர்க்கப்பட்டதாகவும் கூறினார். அதாவது,  தொலைபேசி மூலம் நேரடியாகப் பெறப்பட்ட அனைத்து புகார்களும் சரியான நேரத்தில் தீர்க்கப்பட்டன. பக்சர் மாவட்டத்தின் பிரம்மபூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடி எண் 56, ஃபதுஹா சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடி எண் 165 மற்றும் 166, மற்றும் லக்கிசராய் அருகே உள்ள சூர்யாகர்ஹாவில் உள்ள வாக்குச் சாவடி எண் 1, 2 மற்றும் 5 உள்ளிட்ட சில வாக்குச் சாவடிகளிலும் புறக்கணிப்புகள் பற்றிய தகவல்கள் பெறப்பட்டன… இன்று முடிவடைந்த முதல் கட்ட வாக்குப்பதிவில் எந்த விரும்பத்தகாத சம்பவங்களும் பதிவாகவில்லை. வாக்குப்பதிவு அமைதியாகவும் சுமூகமாகவும் நடத்தப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.

மேலும்,  தற்போதைய வாக்குப்பதிவு சதவீதம் 64.46% என்றும், இறுதி எண்ணிக்கை ஒரு மணி நேரத்தில் வரும் என்றும், பெண்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்தனர் என்றும் இந்த முறை பெண்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்தனர்…” என்று தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு அதிகரிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜான் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர், இது “கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான வாக்குப்பதிவு என்று கூறியதுடன், இந்த  அதிக பதிவு,   பீகாரில் மாற்றம் வருவதைக் குறிக்கிறது. நவம்பர் 14 ஆம் தேதி (நவம்பர்) ஒரு புதிய அமைப்பு நிறுவப்பட உள்ளது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.