சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர் மனைவியுடன் நள்ளிரவில் தற்கொலை முயற்சி மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் சிவலிங்கம் சிட் பண்ட்ஸ் நடத்தி வந்த நிலையில், அவரது தற்கொலை முயற்சி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவர் தளபதி பாஸ்கர், இவர் தமிழ்நாடு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகவும் உள்ளார். தொழிலதிபரரான இவர் பைனான்ஸ் நடத்தி வருகிறார். அவரது மனைவி தேன்மொழி (45). அவர் சிவலிங்கம் சிட்பண்ட் என்ற பைனான்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர்கள் சென்னை போரூர் காரம்பாக்கம் பகுதியில் வசித்து வருகின்றனர்.
தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த தளபதி பாஸ்கர் சிவலிங்கம் சிட் பைனான்ஸ் என்ற நிறுவனத்தை திருவள்ளூர், ஆவடி, குரோம்பேட்டை, மடிப்பாக்கம், கொளத்தூர், மயிலாப்பூர் என பல்வேறு பகுதியில் நடத்தி வந்துள்ளார். இதன் தலைமையகம் மதுவாயலில் உள்ளது. இந்த பைனான்ஸ் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக கடன் பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்து வந்த தளபதி பாஸ்கர் தம்பதி, வேறு வழிதெரியாமல் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளனர். அதன்படி நள்ளிரவு சுமார் இரவு 2 மணி அளவில் வீட்டில் பாஸ்கா் மற்றும் அவரது மனைவியும் பூச்சி மருந்து குடித்துள்ளனர். இதனால் அவர்கள் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். அதனை கண்ட அவரது மகன் அலறியடித்ததுடன் உடனே உறவினர்களின் உதவியுடன் அவர்களை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை முயற்சி தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா். இச்சம்பவம் அவரது நிறுவனங்களில் சீட்டு பணம் கட்டி வந்தவரகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவலிங்கம் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட், தமிழ்நாடு, சென்னையில் நிறுவப்பட்டது. நிதி மற்றும் காப்பீட்டு சேவைத் துறையில் நிதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது . இது ₹1.00 மில்லியன் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தையும் ₹1.00 மில்லியன் செலுத்தப்பட்ட மூலதனத்தையும் கொண்டுள்ளது. இதன் தலைவர் சியலிங்கம் பாஸ்கர் (இயக்குனர்), தென் மொழி (இயக்குனர்) ஆகியோர் அடங்குவர். இதன் தலைமைஅலுவலகம், Sf. எண். 460/2A, மெட்ரோ நகர், வானகரம்,, சென்னை, தமிழ்நாடு, 600116 இல் அமைந்துள்ளது.