பாட்னா: பீகாரில் இன்று முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. வாக்களித்தபின் வாக்காளர்கள் புகைப்படம் எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் பெண் வாக்காளர்களுக்கு தனியாக வாக்குப் பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (RJD) தலைவரும், பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்களித்தனர்.

243 தொகுதிகள் கொண்ட பீகார் மாநிலத்தில் இன்று 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று வாக்குப்பபதிவு 121 தொகுதிகளில் மொத்தம் 1,314 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இன்றை வாக்குப்பதிவுல், 3 கோடியே 92 லட்சம் ஆண்கள் வாக்காளர்களும், 3 கோடியே 50 லட்சம் பெண் வாக்காளர்களும் உள்ளனர். வாக்கு ப்பதிவுக்காக சுமார் 90 ஆயிரத்து 712 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல்கட்ட தேர்தலுக்காக கடந்த மாதம் 10-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 17-ந் தேதி நிறைவடந்தது. 18-ந் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. மனுக்கள் வாபஸ் பெற 20-ந் தேதி கடைசி நாளாக இருந்தது. இதையடுத்து நேற்று வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது.

இதையடுத்து இன்று காலை 7மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பல பகுதிகளில் மக்கள் அதிகாலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். மாலை 5மணி வரை வாக்களிக்கலாம். ஒவ்வொரு பகுதியிலும் பெண் வாக்காளர்களுக்கு தனியாக வாக்குப் பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களித்தபின் வாக்காளர்கள் புகைப்படம் எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (RJD) தலைவரும், பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்களித்தனர்.
வாக்களித்த பிறகு, தங்கள் விரல்களில் வைக்கப்பட்டுள்ள மை அடையாளத்தை அவர்கள் பெருமிதத்துடன் காட்டினர். வாக்களித்த பிரபலங்கள்
- லாலு பிரசாத் யாதவ் (முன்னாள் பீகார் முதல்வர் மற்றும் RJD தலைவர்).
- ராப்ரி தேவி (லாலுவின் மனைவி மற்றும் முன்னாள் முதல்வர்).
- தேஜஸ்வி யாதவ் (RJD தலைவர் மற்றும் மகாகத்பந்தன் முதல்வர் வேட்பாளர்).
- ராஜ்ஸ்ரீ யாதவ் (தேஜஸ்வி யாதவின் மனைவி).
- மிசா பாரதி (RJD தலைவர்).
- ரோஹினி ஆச்சார்யா (RJD தலைவர்).
தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளமானது, பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) எதிராகக் கடுமையான போட்டியை வழங்கி வருகிறது.
பீகார் தேர்தல் களத்தில் உள்ள தேஜஸ்வியாதவ் உள்பட பல தலைவர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.