சென்னை: தவெக சார்பில் முதல்வர் வேட்பாளராக விஜய் என்றும், அவரை 2026ல் முதல்வராக்க கழக தோழர்கள் அனைவரும் சபதம் ஏற்போம் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தவெக தலைவர் விஜயின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கருர் கூட்ட நெரிசல், அதன் காரணமாக 41 பேர் உயிரிழப்பு சம்பத்திற்கு பிறகு, தவெக தரப்பில் இன்றுதான் பொது நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி, தவெக சிறப்பு பொதுக்குழு இன்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது. காலை 11மணி அளவில் தொடங்கிய இந்த சிறப்பு பொதுக்குழுவில் கலந்துகொள்ள அழைப்பிதல் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து சிறப்பு பொதுக்கு கூடியது. முதலில், கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து தவெக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு உள்பட 10க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தவெக சார்பில் முதல்வர் வேட்பாளராக விஜய் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

“தவெக கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம்” வழங்கியும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மீனவர்கள் கைது விவகாரத்தில் ஓரவஞ்சனையுடன் செயல்படும் ஒன்றிய அரசைக் கண்டித்து தவெக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவசர கதியில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை நிறுத்தக்கோரி தவெக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது வெறும் பொதுக்குழு கூட்டம் அல்ல. நம்முடைய இலட்சிய பயணத்தின் ஒரு வரலாற்று திருப்பம். நம்முடைய கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்தவும் நம்முடைய கரங்களை மேலும் பலப்படுத்தவும் நாம் இங்கு கூடியிருக்கிறோம்.
இனி ஒரு நொடி கூட ஓய்வில்லாமல், கிராமங்களிலும், நகரங்களிலும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஆளும் அரசின் அவலங்களையும், நம் கட்சியின் திட்டங்களையும் விளக்க வேண்டும்.
நம் தலைவர் விஜயை 2026ல் முதல்வராக்க கழக தோழர்கள் அனைவரும் சபதம் ஏற்போம் என தீர்மானத்தின்மீதுபேசிய கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறினார்..