சென்னை: பரப்புரை, ரோடு ஷோ கூட்டக் கட்டுப்பாடு தொடர்பாக நவ.6ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நவ.6-ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கரூர் தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை, ரோடு ஷோ வின் போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடு நெறிமுறைகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்டி உள்ளது. இந்த கூட்டமானது, மூத்த அமைச்சர்கள் தலைமையில் நடைபெறும் என்றும், இக்கூட்டத்தில் பங்கேற்க, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
எஸ்ஐஆருக்கு எதிராக திமுக கூட்டிய அனைத்துகட்சி கூட்டத்தில் துக்கடா கட்சிகள், தனி நபர்கள் என 60 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்து, அவர்களில் 40 பேர் கலந்துகொண்ட நிலையில், முக்கிய நிகழ்வான பரப்புரை, ரோடு ஷோ குறித்த நிகழ்வுகள் குறித்து ஆலோசனை நடத்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது, முரணாகவே உள்ளது.