கோவை: கோவையில்  அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி படித்து வந்த நிலையில், காதலனுடன்  நேற்று இரவு தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், கல்லூரி காதலனை தாக்கி விட்டு கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையேஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மட்டுமின்றி, சக மாணவிகளிடையே கொந்தளிப்பை ஏற்படத்தி உள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

மதுரையைச் சேர்ந்தவர் 21 வயது மாணவி ஒருவர் கோவையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் சட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அங்குள்ள  விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்குச் சென்று வரும் நிலையில், நேற்று ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு,  கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் தனது காதலனுடன், காரில், சென்று  கோவை பீளமேடு விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தி விட்டு 2 பேரும் காருக்குள் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வந்த 3 பேர் கொண்ட கும்பல்  காரை நோக்கி வந்தனர். காரின் கதவை தட்டி உள்ளே இருந்த 2 பேரையும் மிரட்டினர். இந்த  இரவு நேரத்தில் இங்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டபடியே காரில் இருந்த காதலனை வெளியே இழுத்தனர். கல்லூரி மாணவியின் கண் முன்பே அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினர். பலத்த காயம் அடைந்த காதலன் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அந்த  3 பேரும் சேர்ந்து கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே ஆத்திரம் அடைந்த 3 பேரும் மாணவியை, வலுக்கட்டாயமாக அங்குள்ள  ரெயில்வே தண்டவாளம் அருகே புதருக்குள் தூக்கிச் சென்று 3 பேரும், மாணவியை ஒருவர் பின் ஒருவராக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் மயக்கம் தெளிந்த காதலன், காதலியை மீட்ட நிலையில், இதுகுறித்து,   செல்போன் மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து பீளமேடு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இன்ஸ்பெக்டர் அர்ச்சுன்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அங்கு படுகாயத்துடன் கிடந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

மாணவியுடன் தனிமையில் காருக்குள் பேசி வந்த வாலிபர்,  ஒண்டிபுதூ’ர் பகுதியில்  இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடை நடத்தி வருவதாக கூறப்படகிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.