மதுரை: எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்காகவே ஒன்றிணைந்து உள்ளோம் என்று கூறியதுடன், அ.தி.மு.க.வில் பிரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடரும் என செய்தியாளர்களுடன் ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி கூட்டாக தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய மூவரும் இணைந்து பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து டி.டி.வி., ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பழனிசாமிதான் எங்கள் எதிரி; துரோகத்தை வீழ்த்த இணைந்துள்ளோம் என தெரிவித்து உள்ளனர்.
டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுடன் கூறும்போது, 2 ஆண்டுகளுக்கு முன்பே எங்களுடைய கூட்டணி இருக்கிறது துரோகத்தின் முகவரியான எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் எங்கள் எதிரி. துரோகத்தை வீழ்த்தும் வரை அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்றும் ஓயாது என்று கூறியதுடன், எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்காகவே ஒன்றிணைந்து உள்ளோம். காலதாமதம் காரணமாக சசிகலாவால் எங்களுடன் இணைந்து இன்று வர முடியவில்லை. சசிகலா எங்கு இருந்தாலும் மனதால் என்றும் எங்களுடன் இணைந்து உள்ளார் என்றவர் தேர்தலில் ஒன்றிணைந்து நாங்கள் பணியாற்றவிருக்கிறோம். துரோகத்தை வீழ்த்துவதற்குதான் அமமுக உருவாக்கப்பட்டது. நாங்கள் ஜெயலலிதாவின் தொண்டர்கள். அதனடிப்படையில் இணைந்திருக்கிறோம். சசிகலா இந்த கூட்டணியில் உறுதியாக இணைகிறார் என்றதுடன், எங்களுடைய பணிகள் பற்றி வருங்காலத்தில் கொஞ்சம்கொஞ்சமாக தெரிந்துகொள்வீர்கள்” என்று கூறினார். மேலும், அ.தி.மு.க.வில் பிரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடரும் என்றார்.
ஓபிஎஸ் பேசுகையில், ‘பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒன்றிணைக்கவே பசும்பொன்னில் இன்று இணைந்திருக்கிறோம். அதிமுக ஒன்றிணைய வேண்டும், மீண்டும் தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா வின் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று நோக்கத்தில் தேவரின் சன்னதியில் சபதம் மேற்கொண்டிருக்கிறோம். பசும்பொன்னில் இருந்து இந்த கூட்டணி தொடரும்’ என்றார்.
ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையனுடன் கைகோர்த்து தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். அ.தி.மு.க. எங்களுக்கு எதிரி இல்லை. இ.பி.எஸ். மட்டும் தான் எங்களது எதிரி. இ.பி.எஸ்.-ஐ வீழ்த்தும் வரை ஓய மாட்டோம். * தொடர்ந்து ஒருங்கிணைந்து பயணிப்போம்.
இவ்வாறு அவர் கூறினர்.

முன்னதாக, சும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகிய இருவரும் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு ஒரே காரில் பயணித்தனர்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் இவர்களுடன் இணைய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் பசும்பொன் செல்லும் வழியில் அபிராமம் பகுதியில் உள்ள சாலையில் மூவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். இதைத் தொடர்ந்து ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் மூவரும் பசும்பொன் வந்தனர். பின்னர் மூவரும் ஒன்றாக இணைந்து முத்துராமலிங்கத் தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன்பின்னர் வந்த சசிகலாவும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய நிலையில், சசிகலாவுடன் ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் பேசியுள்ளனர்.
முன்னதாக மதுரை வந்த செங்கோட்டையன், அங்கு ஓபிஎஸ் உடன் ஆலோசனை மேற்கொண்டார். எடப்பாடி மீதான அதிருப்தியுடன் இருந்து வரும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மதுரையில் திடீரென்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியதோடு, இருவரும் ஒரே காரில்பசும்பொன் புறப்பட்டு பசும்பொன் வந்தனர். இதைத்தொடர்ந்து, பசும்பொன்னுக்கு வந்த டிடிவி தினகரனையும் சந்தித்து பேசினர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திததனர்.
அதிமுகவுக்கு எதிரான கட்சி செயல்பாடுகளில் ஈடுபட்டதாக நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் செங்கோட்டையன் புறப்பட்டுச் சென்றது, அதிமுக மட்டுமில்லாது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால், கே.பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரனுடன் சசிகலா தலைமையில் ஒன்றினைவதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம், தவெக நிர்வாகி சிடி.நிர்மல் குமார், சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பிருந்த நிலைபாட்டிலே தவெக இருப்பதாக கூறியதால், அவர்கள் அதிமுக-பாஜக கூட்டணிக்கு செல்லவாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதனால், வரும் தேர்தலில் ஆட்சியைப்பிடிக்க திமுகவுக்கு எதிராக அதிமுகவை பலமாக்க வேண்டும் என்ற குரல்கள் எதிரொலிக்க தொடங்கி உள்ளன.