சென்னை: ரூ.18லட்சம் வாங்கிக்கொண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு போலி பணி ஆணை வழங்கிய பலே கில்லாடி கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உதவி காவல் ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சங்களை அபேஸ் செய்த ரஞ்சித்குமார் என்பவரை போலீசார் கையும், களவுமாக பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் என்பவர் காவல்துறையினல் பணியில் சேர  முயற்சி செய்து வருகிறார். ஆனால், அவருக்கு இதுவரை பணி கிடைக்காத நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு அறிமுகமான   ரஞ்சித்குமார் என்பவர் , தனக்கு காவல்துறையில் தெரிந்தவர்கள் உள்ளார்கள் எ, அவர்கள் மூலம் எளிதாக உதவி காவல் ஆய்வாளர் வேலை வாங்கிவிடலாம் என ஆசை காட்டி உள்ளார். மேலும், அதற்கு சில லட்சங்கள் பணம் செலவாகும் என்று கூறி உள்ளார்.

இதை உண்மை என நம்பிய சீனிவாசன் கடந்த  2017 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை பல தவணைகளாக சுமார் 18 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் பணி ஆணை கிடைக்காத நிலையில், அவருக்கு சீனிவான   நெருக்கடி கொடுத்துள்ளார். இதையடுத்து,  கடந்த மாதம் ரஞ்சித்குமார் , சப்-இன்ஸ்பெக்டர் பணிக்காக பணி நியமண ஆணை எனக் கூறி ஒரு தாளை சீனிவாசனிடம் கொடுத்துள்ளார். மேலும், இதனை காவல்துறையிடன் கொடுத்தால் வேலைக்கு எடுத்து கொள்வார்கள் என கூறியுள்ளார்.

இதை நம்பி சீனிவாசன் கடந்த வாரம் ஒரு காவல் நிலையத்துக்கு சென்று அந்த ஆணையை கொடுத்துள்ளார். அப்போது காவலர்கள் இது போலியான பணி நியமண ஆணை என்பதை கண்டறிந்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த சீனிவாசன், இதுதொடர்பாக செய்வதறியாமல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் ரஞ்சித்குமார் நாவலூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், இதேபோல் அரசு வேலை வாங்கிதருவதாக பலரிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ரஞ்சித்குமார். அவரை தேட சிறப்பு படை அமைக்கப்பட்டது. அதில், அவர்  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்ற  தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். மேலும்,  அவரிடம் இருந்து போலியாக அச்சிடப்பட்ட பணி நியமன ஆணைகள், வங்கி புத்தகம் என வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. பின் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்