கோவை: சார்  (SIR– Special Intensive Revision) என்று சொன்னாலே திமுகவுக்கு ஒரு அலர்ஜி என மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் 4ந்தேதி முதல் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தப்பணிகள்  தொடங்கப்படுகிறது. இதற்கு திமுக உள்பட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சார் என்று சொன்னாலே திமுகவுக்கு ஒரு அலர்ஜி, வாக்காளர் பட்டியல் சீர்திருத்தமான எஸ்ஐஆர்-ஐ கண்டு திமுகவுக்கு பதற்றம் ஏன்? என  கேள்வி எழுப்பி உள்ளார்.

3 நாள் பயணமாக கோவை வந்துள்ள துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காகக் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்த, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  தமிழகத்தில் இருந்து தமிழரை பிரதமர் மோடி துணை ஜனாதிபதி ஆக்கி உள்ளார் என கூறியவர், வரும் தேர்தலில் திமுக தோல்விக்கு  இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் என விமர்சனம் செய்தார்.

‘தமிழ்நாட்டில் புயல் பாதிப்பு ஏற்படும்  பட்சத்தில் பாஜ சார்பில் மாவட்ட மாநில நிர்வாகிகள்,  உதவி புரியவும் தயார் நிலையில் இருக்கிறோம் என்றவர், இந்த ஆண்டும்  பருவமழை தவறாமல் வந்துள்ளது என்றார்.

இதையடுத்து, வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் பணியான எஸ்ஐஆர் (SIR– Special Intensive Revision)  குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர், SIR  என்றாலே திமுகவுக்கு அலர்ஜி என நக்கலாக தெரிவித்தவர்,  அண்ணா பல்கலை சம்பவத்தில் இருந்தே, சார் என்று சொன்னாலே திமுகவுக்கு ஒரு அலர்ஜியாகவே இருப்பதாக  கூறியவர், நேரு காலத்தில் இருந்தே இந்த கணக்கெடுப்பானது செய்யப்பட்டு வருகிறது. பீகாரில் நடந்த சம்பவத்தில் 65 லட்சம் பேரில் 30 லட்சம் பேர் இடம் பெயர்ந்து விட்டார்கள். மீதமுள்ளவர்கள் இறந்து விட்டார்கள் என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின் போது திமுகவினர் சேர்த்துள்ள போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்று அவர்களுக்கு பயம், அதனால்தான் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்றார்.

கொளத்தூர் தொகுதியில் 900 வாக்குகள் அதிகமாக உள்ளன என்று தெரிவித்த அவர், தி.மு.க அமைச்சர்கள் அனைவரும் போலியாகச் சேர்த்த வாக்காளர்கள் பற்றி தெரிந்து கொள்ள நேரிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இதனால் வெற்றி வாய்ப்பு கிடைக்காது என்று பயப்படுகிறார்கள் என்று கூறினார்.

இந்த நிகழ்வைத் தமிழ்நாடு அரசாங்கம் தான் செய்ய உள்ளது. எனவே ஏன் நடுக்கமும் பயமும் வருகிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும்,  விஜய் கொடுத்த பணத்தை ஒரு பெண்மணி திருப்பி அனுப்பியது குறித்துப் பேசிய அவர், ஒரு சிலர் உதவி செய்யும் நோக்கத்துடன் கொடுப்பார்கள். சிலர் உதவியை வாங்க மறுப்பார்கள். சிலர் யாரிடமும் உதவி வாங்காமல் வாழ வேண்டும் என நினைப்பார்கள். அந்த நோக்கத்தில் அந்தப் பெண்மணி பணத்தைத் திருப்பி அனுப்பி இருக்கலாம் என்று நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்தார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின் போது நீக்கல், சேர்த்தல் பட்டியலை தமிழக அரசு அதிகாரிகள் தான் செய்யப் போகிறார்கள். அப்படி இருக்கும்போது, இவர்கள்  எதற்கு அஞ்சுகிறார்கள். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை கண்டு திமுகவுக்கு பதற்றம் ஏன்? தோல்வி பயத்தால் திமுக கூட்டணிக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

ஞானசேகரனுக்கு 30ஆண்டுகள் ஆயுள் தண்டனை: அண்ணா பல்கலை மாணவி வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு…

 

‘யார் அந்த சார்?’ என பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர் அவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றம்…

https://patrikai.com/dmk-govt-gets-nervous-when-ask-yaar-antha-sir-they-have-deliberately-ignored-the-governor-from-the-assembly-edappadi-palaniswami-accusation/