டெல்லி : உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்தநீதிபதி  சூர்ய காந்தை நியமிக்க தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பரிந்துரை செய்தார். தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நவ.24ல் ஓய்வுபெறுவதை அடுத்து புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படுகிறார்.

தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், தனது உச்ச நீதிமன்ற சகாவும், தனக்குப் பிறகு மூத்த நீதிபதியுமான நீதிபதி சூர்யா காந்த்தின் பெயரை இந்திய தலைமை நீதிபதி பதவிக்கு தனது வாரிசாகப் பரிந்துரைத்தார்.

தற்போதைய உச்சநீதிமன்ற  52வது தலைமை நீதிபதியாக இருக்கும்   பி.ஆர்.கவாய் நவ.23ல் ஓய்வு பெறுகிறார்.  இதையடுத்து  53வது   புதிய தலைமை நீதிபதி நியமனம் தொடர்பான பணிகளை மத்திய சட்ட அமைச்சகம் தொடங்கி உள்ளது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் தற்போது  சீனியாரிட்டியில் முன்னணியில் உள்ள  சூர்யகாந்த்-ஐ அடுத்த தலைமை நீதிபதியாக நியமிப்பது தொடர்பான நடைமுறைகள் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக தற்போதைய தலைமை நீதிபதி, கவாய், அடத்த  அடுத்த தலைமை நீதிபதி  சூர்ய காந்த் பெயரை பரிந்துரை செய்து மத்தியஅரசுக்கு கடிதத் அனுப்பி உள்ளார்.

மத்தியஅரசு இதை பரிசீலனை செய்து, குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புவார். குடியரசு தலைவர் அதற்கான அறிவிப்பை வெளியிடுவார்.

இதையடுத்து  நீதிபதி  சூர்ய காந்த், நவம்பர் 24 அன்று  நாட்டின் 53வது தலைமை நீதிபதி  பதவியேற்பார். அவருக்கு 15 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் உள்ளது. இவர், 2027ம்  9ந்தியுடன் ஓய்வு பெறுகிறார்.

அதன்படி, தற்போதைய தலைமைநீதிபதி கவாய்,  தனது உச்ச நீதிமன்ற சகாவும், கொலிஜியம் உறுப்பினரர் மற்றும்  மூத்த நீதிபதியான சூர்யகாந்த் பெயரை, அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு,  பரிந்துரை செய்தார். இதற்காக  த கடிதம் இன்றுக்குள் வழங்கப்படும் என்று தெரிகிறது. அந்த கடிதம் கிடைத்ததும், புதிய தலைமை நீதிபதிக்கான அறிவிப்பை மத்தியஅரசு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும். அதை ஏற்று ஜனாதிபதி அறிவிப்பு வெளியிடுவார்.

புதிய தலைமை நீதிபதியாக  நியமிக்கப்பட உள்ள  நீதிபதி சூர்யகாந்த் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 7, 2000 அன்று ஹரியானாவின் மிக இளைய அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டடார். அதைத் தொடர்ந்து, மார்ச் 2001-ல் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். ஜனவரி 9, 2004 அன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக உயர்த்தப்படும் வரை அவர் அட்வகேட் ஜெனரலாகப் பணியாற்றினார்.

தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) ஆளும் குழுவில் பிப்ரவரி 23, 2007 அன்று இவர் உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டார், மேலும் பிப்ரவரி 22, 2011 வரை தொடர்ந்து 2 ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடித்தார். தற்போது, இந்திய உச்ச நீதிமன்றத்தின் கீழ் உள்ள ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமான இந்திய சட்ட நிறுவனத்தின் பல்வேறு குழுக்களில் அவர் உறுப்பினராக உள்ளார். நவம்பர் 12, 2024 முதல் அவர் உச்ச நீதிமன்ற சட்ட சேவைகள் குழுவின் தலைவராக இருந்து வருகிறார்.