சேலம்: மக்கள் தோழர்  மற்றும் முன்னாள்  முன்னாள் மத்தியஅமைச்சர் மற்றும்  மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான வாழப்பாடியாரின் 23வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவரது சிலை மற்றும் உருவ படங்களுக்கு  காங்கிரஸ் கட்சி தலைவர்கள்,  அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

வாழப்பாடியார் தமிழ்நாடு  காங்கிரசின் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தபோதுதான்,  “காமராஜருக்குப் பிறகு, தமிழக காங்கிரஸ் உத்வேகத்துடன் செயல்பட்டது‘  காங்கிரஸ் தேசிய தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களாக  பாராட்டப்பட்ட   பெருமைக்கு சொந்தக்காரர் வாழப்பாடியார். இன்று அவரது 23வது நினைவு தினம்.

அவரது 23வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு,  சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் அவரது உருவபடத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர்.

சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள  ராஜ்பவனில் உள்ள அவரது உருவ சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினார். அதுபோல, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அமைந்துள்ள அவரத நினைவாலயத்திலும் மாவட்ட காங்கிரஸ்  தலைவர்கள், நிர்வாகிகள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் மரியாதை செலுத்தினர்.

1940ம் வருடம் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பிறந்த வாழப்பாடியார்,  தனது 19ம் வயதில் 1959ல் திராவிடர் கழகத்தில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் துவக்கினார். பிறகு இந்திய தேசிய காங்கிரசில் தன்னை இணைத்துக்கொண்டவர்,  1968ல் சேலம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராக பதவி வகித்தார். காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான  ஐ. என். டி. யூ. சியின் தலைவராக சிறப்பாக  பணியாற்றினார். அந்த சமயத்தில் தொழிலாளர் பிரச்சினைகள் பலவற்றை தனது திறமையால் தீர்த்துவைத்தார்.

ஆறு முறை இந்திய மக்களவை உறுப்பினராகவும் இரு முறை இந்திய நடுவண் அரசில் அமைச்சராகவும் பணியாற்றினார். .

1977 பொதுத் தேர்தலில் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980, 1984, 1989, 1991 பொதுத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியிலிருந்தும், 1998 தேர்தலில்சேலம் மக்களவைத் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1991-92ல் பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

1998-99ல்  வாஜ்பாய் அமைச்சரவையில் பெட்ரோலியத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 

இடையில் ராஜீவ் காங்கிரஸ் என்ற கட்சியைத் துவக்கிய வாழப்பாடி ராமமூர்த்தி, 2001ல் மீண்டும் காங்கிரசில் இணைந்து விட்டார். 2002ம் ஆண்டு அக்டோர் 27ம் தேதி இயற்கை எய்தினார்.

இன்று அவரது 23வது நினைவுதினமாகும். இதையொட்டி, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டதுடன், பல பகுதிகளில், அவரது உருவ படம் வைத்து மலர் மாலை அணிவித்து  மரியாதை செய்யப்பட்டது.

இன்று(27-10-25) திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் நுழைவாயிலில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் மத்திய மந்திரியுமான வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களின் 23 வது நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் பிரமுகர் மரவெட்டி தியாகராஜன் தலைமையில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் கோட்டத் தலைவர்கள் ஜெயம் கோபி எஸ் என் தர்மேஷ் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் முன்னாள் மாவட்ட தலைவர் ஜவகர் ஆகியோர் கலந்து கொண்டு அன்னாரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மலைக்கோட்டை சொக்கலிங்கம் மலைக்கோட்டை சேகர் செல்வி குமரன் கதர் ஜெகநாதன் சக்தி வடிவேல் தாகூர் தெரு முருகன் நிர்மல் குமார் கிருஷ்ணமூர்த்தி பாஸ்கர் லட்சுமணன் எல்லம்மாள் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.