டெல்லி: நாடு முழுவதும் ‘எஸ்ஐஆர்’ (தீவிர வாக்காளர் சீர்திருத்தம் ) செய்வது குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறது.
அதன்படி, அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்பட சில மாநிலங்களில் உடனடியாக வாக்காளர் சீர்திருத்தம் பணி தொடங்குவது குறித்து இன்று அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தத்தம் (SIR – Special Intensive Revision) மேற்கொள்ளப்பட்டது. . இதன்முலம் போலி வாக்காளர்கள், அகதிகளின் வாக்காளர்கள் உரிமை உள்பட பல லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இருந்தாலும் தேர்தல் ஆணையம் தனது நிலையில் இருந்து பின்வாங்காமல் பீகாரில் தீவிர வாக்காளர் சீர்திருத்தம் பணியை மேற்கொண்டது.
இதையடுத்து நாடு முழுவதும் தீவிர வாக்காளர் சீர்திருத்தம் (SIR – Special Intensive Revision) மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையர்கள் மாநில தேர்தல் ஆணையர்களுடன் பல முறை ஆலோசனை மேற்கொண்டனர். இதையடுத்து, நாடு முழுவதும் தீவிர வாக்காளர் சீர்திருத்தம் குறித்து இன்று அறிவிப்பு வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக இன்று மாலை 4.15 மணிக்கு தேர்தல் ஆணையர்கள், டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் SIR தொடர்பான ஆலோசனைகளை வழங்குவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின்போது, விரைவில் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளாவில் முதலில் சிறப்பு திருத்தம் மேற்கொள்வது குறித்து அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.