அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்த 1 லட்சம் டாலர் (₹90 லட்சம்) H1B விசா கட்டணம் பலருக்கு அதிர்ச்சியளித்தது.

இந்த விசாவைப் பெறும் 66 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்பதால் இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விசா நடைமுறை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியாகி உள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள H1B விசாதாரர்களுக்கு இந்த கட்டணம் பொருந்தாது.

அதேபோல் மாணவர் விசாவில் இருந்து H1Bக்கு அப்கிரேட் ஆனவர்களுக்கும் கட்டணம் இல்லை. ஆனால், அவர்கள் அந்த இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறியிருக்கக் கூடாது என்று கண்டிஷன் போட்டுள்ளது.

புதிதாக H1B விசா பெற்று அமெரிக்கா வருபவர்கள் அல்லது விசா காலம் முடிந்து மீண்டும் விண்ணப்பிப்பவர்கள் — 1 லட்சம் டாலர் கட்ட வேண்டும்.

அமெரிக்காவில் இருப்பவர்களால் செய்ய முடியாத வேலைக்காக வெளிநாட்டிலிருந்து நிபுணர்களை அழைத்தால் அவர்களுக்கும் இந்த விசா கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இப்போது செல்லுபடி ஆகும் ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியே செல்வதற்கும், மீண்டும் அமெரிக்கா திரும்புவதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.