சென்னை: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 1,46,950 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டமாக மாறி உள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டுகளாக மழை பெய்துவருகிறது. நேற்று காலை முதல் விட்டு விட்ட தொடர் மழை பெய்து வருகிறது. இன்று காலை 10மணி வரை கனமழை கொட்டியது. இதனால், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மேலும் மழை காரணமாக குடிசை பகுதிகள் மற்றும் தாழ்வார பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி பள்ளிகள், மற்றும் தங்குமிடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மழையால் பாதித்த மக்களுக்கு இன்று காலை பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது. அதன்படி, இன்று 1,46, 950 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.