சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக இன்றும், நாளையும் சென்னை உள்படபல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் இன்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த தாழ்வு பகுதியாக (புயல்) வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடலோர பகுதியை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நெருங்கும் என தெரிவித்துள்ளது. 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்டும் விடுக்கப்பட்டுள்ளது.

10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், திருவள்ளூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நெல்லை (திருநெல்வேலி), தூத்துக்குடி, குமரி (கன்னியாகுமரி) ஆகிய 10 மாவட்டங்களுக்கு இன்று (அக்டோபர் 21) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 20.4 செ.மீ வரை மழை பதிவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் (நாகை), தஞ்சாவூர் (தஞ்சை), புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 21) அதி கனமழைக்கான (Extremely Heavy Rainfall) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது!

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர் திருவள்ளூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நெல்லை தூத்துக்குடி, குமரி ஆகிய 10 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 20.4 செ.மீ வரை மழை பதிவாகலாம் என வானிலை மையம் கணித்துள்ளது. . இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் இன்று பிற்பகல் வரை  மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியிலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் இரு வெவ்வேறு புயல் சின்னங்கள் உருவாகியுள்ளதால், தமிழகம், கேரளம் மற்றும் புதுவையில் கனமழை பெய்து வருகின்றது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கக் கடலில் இன்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது.   இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் மண்டலமாக  தீவிரமடையும்.

இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்றும், இது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால், பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இன்று  சென்னை ‘,. காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம்,  மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மித கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த காற்றழுத்தம் அக்டோபர் 25, 26 ஆகிய தேதிகளில் உருவாக வாய்ப்புள்ளது.

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, தங்கச்சிமடத்தில் 170 மி.மீ., மண்டபம் பகுதியில் 143 மி.மீ. மழையும் ஈரோட்டில் வரட்டுபள்ளத்தில் 128 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதியால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும்.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் காரணமாக சென்னை, புறநகரில் கனமழை பெய்து வருகிறது.  நள்ளிரவு முதலே விட்டு விட்டு செய்துவரும், இன்று காலை முதல் தொடர் மழையாக பெய்துவருகிறது. சென்னையில் ரெட்ஹில்ஸ், மாதவரம், பெரம்புர், எழும்பூர், சேப்பாக்கம், மயிலாப்பூர், அண்ணாசாலை, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, திருவான்மியூர், இசிஆர், வேளச்சேரி, ஆதம்பாக்கம், மேடவாக்கம், தாம்பரம், செங்கல்பட்டு  உள்ளிட்ட சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணிக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை  இன்று மாலை வரை தொடர வாய்ப்புள்ளது.

அதேபோல், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், சேலம், கோவை, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், வேலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளதகவலில்,  தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இதன் காரணமாக,  ,”ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரியில் கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி,புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://patrikai.com/the-next-low-pressure-area-will-form-on-october-25-26-this-low-pressure-area-is-likely-to-become-a-cyclone-by-the-end-of-the-month/