சென்னை: Symphonic Dances  என்ற பெயரில் புதிய இசைக் கோர்வையை எழுதவுள்ளதாக இசைஞானி  தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியிட்டுள்ளார்.

இசைஞானி  இசைஞானி இளையராஜா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 8,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 1975-ம் ஆண்டு துவங்கிய இசைஞானி இளையராஜா அவர்களின் இசைப் பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. திரையிசை மட்டுமின்றி பல்வேறு தனியிசை படைப்புகளையும் வெளியிட்டுள்ளார் இளையராஜா.

இதுமட்டுமின்றி ஹாலிவுட் இசையமைப்பாளர்களுக்கு சவால் விடுக்கும் வகையில், முழு மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை அமைத்து சாதனை படைத்துள்ளார்.  இந்த சாதனையை படைத்த முதல் தமிழர் மட்டுமல்ல இசைஞானி இளையராஜா முதல் இந்தியரும் ஆவார். ஆசிய நாடுகளைச் சேர்ந்த எவரும் இச்சாதனையை இதுவரை நிகழ்த்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில்,  இளைஞானி, தனது அடுத்த சிம்பொனி இசை குறித்த அறிவிப்பை வீடியோ வாயிலாக வெளியிட்டுள்ளார். இந்தத் தகவலை அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது வீடியோவில்,  ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளதுடன்,   புதிதாக சிம்பொனியை எழுதத் தொடங்கவுள்ளதாகக் குறிப்பிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

https://x.com/i/status/1980246923287351430

முன்னதாக‘  தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு  நடத்தப்பட்ட பிரமண்டமான பாராட்டு விழாவில்,   சிம்பொனி குறித்து உருக்கமாகப் பேசிய இளையராஜா “வாழ்க்கையில் என்னுடைய குழந்தைகளுக்காக நான் நேரம் செலவழிக்கவில்லை. அவர்களுடன் நேரத்தைச் செலவிட்டிருந்தால், இந்த சிம்பொனியை எழுதியிருக்க முடியாது. இதுபோல நீங்கள் விரும்பிக் கேட்கும் அத்தனைப் பாடல்களை இசையமைத்திருக்க முடியாது. சிம்பொனி உருவாக தனது குழந்தைகள்தான் காரணம் என்று இசையமைப்பாளர் இளையராஜா பேசியிருந்தது” நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். இசைத்துறையில் அழியா வரம் பெற்ற சிரஞ்சீவியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜாவின் 2-ஆவது சிம்பொனியா இது அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://x.com/ilaiyaraaja/status/1980246923287351430?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1980246923287351430%7Ctwgr%5E18173d017771db54324928b3b748f65adb175432%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fcinema%2F2025%2FOct%2F20%2Filayaraja-would-begin-writing-a-second-symphony