சென்னை: வங்கக்டகலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாலக  சென்னை உள்பட 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் காரணமாக சென்னை, புறநகரில் கனமழை பெய்து வருகிறது.

ஒரே நேரத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியும், அரபிக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாடு, கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக, இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமாரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலுார், பெரம்பலுார், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங் களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (அக்.22) விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தொடக்கமாக அமைந்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் காரணமாக சென்னை, புறநகரில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், சேப்பாக்கம், மயிலாப்பூர், அண்ணாசாலை, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது. வேளச்சேரி, ஆதம்பாக்கம், மேடவாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம் பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்கிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.