தித்திப்பு நாள்… தீபாவளி!!

 

விழாவின் ஆணிவேர் என்ன என்பதை தேடாமல்….
மகிழ்ச்சியோடு விழாவை வரவேற்போம் !!!!

இன்று ஒரு நாள் இலக்குகளை
ஒதுக்கி வைப்போம்…
களிப்புறுவோம்
குடும்பத்தோடு!!!

எட்டு திக்கிலும்
ஏற்றி வைப்போம் மகிழ்ச்சி தீபத்தை,
இதயங்கள் ஒளி பெறட்டும்!!!

நெருப்(பு)பூக்கள்
நாற்புறமும்
நடனமிடும்….
ரசித்திடுங்கள்
சிறுவர்களாகவே!!

வற்றாத கங்கையைப் போல மகிழ்ச்சியும் புது வெள்ளமாய் பரவட்டும்!!

அசுர குணங்களை வேரறுத்து
தேவ குணங்களை தெளிவாக இன்றே பின்பற்றுவோம்!!!

கோப தாபங்கள்
சுயநல, எண்ணங்களை
விட்டொழிப்போம்!
பொது நலம்
பரவட்டும்
வாண வேடிக்கையாக!!

இருள் சூழ்ந்த
இடமெல்லாம்
மின்மினி பூச்சியின் மகிழ்ச்சியாய்
ஒளி பரவட்டும்
வழி பிறக்கட்டும்!!!

முறுக்கும் அதிரசமும்
நமக்கு மட்டுமல்ல…
தெருவோர மனிதருக்கும் பிடிக்கும் என்பதை
உணருங்கள்!!

ஊசி பட்டாசு கூட
கிடைக்காத சிறார்
இங்குண்டு…
ஒரு கைப்பிடி பட்டாசு
அவர்களுக்கு தரலாமே! !!

அனைவருக்குமான
ஒ(ரு)ளி விழாவை அனைவரோடும் சேர்ந்து கொண்டாடுவோம்
வாருங்கள்….

தொலைக்காட்சி பெட்டியில்
கொண்டாட வேண்டாம்!

தாழ்திறந்து…. வெளி
யே வாருங்கள்….
தரணியின் மனிதர்களோடு கொண்டாடுவோம்🤝🤝🤝🤝

– பா. தேவி மயில் குமார்