சென்னை: வங்கக்கடல் மற்றும் அரப்பிகடலில் என இரண்டு புயல்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், வரும் 22, 23 தேதிகளில் 20 செ.மீ அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை செய்துள்ளது. அதன்படி பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அக்டோபர் 16ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தொடங்கிய முதல்நாளே அதிரடியாக மழை பெய்து மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அன்றுமுதல் தொடர்ந்து, தமிழ்நாட்டில் சென்னை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், நாளை மறுதினம் ( 21 ஆம் தேதி) வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இவை இரண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளதால், ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் அக்டோபர் 22,23 ஆகிய தேதிகளில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை (அக் 20) தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருபபதாகவும் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி ஆகிய 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (அக்., 21) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் நாளை மறுநாள் (அக்., 21) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அக்டோபர் 22ம் தேதி திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 16 மாவட்டங்களில் அக்டோபர் 22ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆரஞ்சு அலர்ட்
அக்டோபர் 23ம் தேதி மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: * திருவள்ளூர்
* சென்னை
* ராணிப்பேட்டை
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* வேலூர்
* கிருஷ்ணகிரி
* திருப்பத்தூர்
* தர்மபுரி
* திருவண்ணாமலை
* விழுப்புரம்
ஆரஞ்சு அலெர்ட்
அக்டோபர் 24ம் தேதி மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* வேலூர்
* திருப்பத்தூர்
* கிருஷ்ணகிரி
* நீலகிரி
* ஈரோடு
முன்னதாக, 24-ம் தேதி வங்கக்கடலில் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது முன்கூட்டியே வரும் 21-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்பிறகு, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடல் பகுதிக்குச் செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.