சென்னை: கரூர் துயர சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தவெக தலைவர் விஜய் விமர்சித்தை, பிரபல யுடியூபரும், ஓய்வுபெற்ற காவல் அதிகாரியுமான வரதராஜன் விமர்சித்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அவருக்கு ஜாமின் வழங்க சென்னை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

கரூர் சம்பவம் தொடர்பாக விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வரதராஜன் என்பவரை, சைபர் கிரைம் போலீசார் கடந்த 7ந்தேதி கைது செய்தனர்.
கரூரில் நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பரப்புபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அவர்களை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து வருகின்றனர். அவர்களில் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் மாரிதாஸ் ஆகியோர் முக்கியமானவர்கள். பெலிக்ஸ் ஜெரால்டை சிறையில் அடைக்க நீதிபதி மறுத்துவிட்டார். மாரிதாசை விசாரணைக்கு பிறகு விடுவித்த போலீசார், தேவைப்படும் போது மீண்டும் ஆஜராகும்படி கூறியிருந்தனர்.
இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது ஐகோர்ட் நீதிபதி செந்தில்குமார், இச்சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவு பிறப்பித்தார். விசாரணையின் போது தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு தலைமை பண்பு இல்லை’என கருத்து தெரிவித்து இருந்தார்.
நீதிபதியின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் சிலர் ஆதரவாகவும், சிலர் அவதூறு பரப்பும் வகையிலும் கருத்து தெரிவித்தனர். முன்னாள் காவலர் வரதராஜனும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த விமர்சனங்களை புன்னகையுடன் புறந்தள்ள வேண்டும் என நீதிபதி கூறியிருந்தார்.
இதற்கிடையில், நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்னர். சமூக வலைதளங்களில் நீதிபதி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக நான்கு பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர் ஜாமின் கோரி, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வதுக்கை விசாரித்த நீதிமன்றம், ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.
விசாரணையின்போது, அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வரதராஜன் முறையீடு செய்தார். இதற்கு எதிராக கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நீதித்துறை, தலைவர்கள் மீது அவதூறாக கருத்துகளை பதிவிடும் போக்கு அதிகரித்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை கடுமையாக ஆட்சேபனை செய்ததால் வரதராஜனுக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜன், நேதாஜி மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து இருந்தார்.
https://patrikai.com/741-dead-supreme-court-orders-cbi-investigation-into-karur-stampede-retired-sc-judge-to-monitor-probe/