அக்டோபர் மாத வானத்தில் அரிய அதிசயம்!
இரண்டு பிரகாசமான வால் நட்சத்திரங்கள் — லெமன் மற்றும் ஸ்வான் — இந்த மாதம் பூமிக்கு மிக அருகில் வரவிருக்கின்றன. இது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பார்க்கக் கூடிய வானியல் நிகழ்வாகும்.

அக்டோபர் 21 — அமாவாசை இரவில் இந்த இரண்டு வாழ் நட்சத்திரங்களும் பூமிக்கு மிக அருகில் இருக்கும்.
லெமன் வால் நட்சத்திரம் (C/2025 A6) அக்டோபர் 12 முதல் நவம்பர் 2 வரை பிரகாசமாகத் தெரியும்.
ஸ்வான் வால் நட்சத்திரம் (C/2025 R2) அக்டோபர் 18 முதல் 21 வரை பார்க்க சிறந்த நாட்கள்.

இதே நேரத்தில் ஓரியானிட்ஸ் விண்கல் மழையும் நடக்கவுள்ளதால் வானம் கண்கவர் காட்சியாக மாறும் என்று வானியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
லெமன் வால் நட்சத்திரம் மீண்டும் வர 1,300 ஆண்டுகள் ஆகும் என்றும் ஸ்வான் 700 ஆண்டுகள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து தொலைநோக்கி அல்லது கேமராவுடன் நகர விளக்குகளிலிருந்து விலகி இருண்ட வானத்தைத் தேர்ந்தெடுத்து நட்சத்திர பார்வையாளர்கள் படையெடுத்து வருகின்றனர்.
வட துருவத்தில் இந்த வால் நட்சத்திரங்கள் பிரகாசமாக தெரியும் என்றபோதும் உலகின் பல பகுதிகளில் வெறும் கண்ணாலும் பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.