சென்னை: கொள்முதல் நிலையங்களில் 30லட்சம் நெல்மூட்டைகள் தேக்கமாகி உள்ளது, தமிழ்நாடு அரசு நாள் ஒன்றுக்கு 600 நெல்மூட்டைகளை மட்டுடே கொள்முதல் செய்கிறது என பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கடுமையாக விமர்சித்தார். மேலும், ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் தினசரி 1,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நெல்கொள்முதல் நிலையங்களில் குறைந்தஅளவே நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும், கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல் மூட்டைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு உரையாற்றினார்.
அப்போது, நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட 15 லட்சம் நெல் மூட்டைகள் திருவாரூரில் கிடங்கில் இருக்கின்றன. மொத்தம் 30 லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. டெல்டா மாவட்டங்களில் போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. அதனால்தான் நெல்மூட்டைகள் தேங்கி கிடப்பதாக குற்றம் சாட்டினார்.
ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட 15 லட்சம் நெல் மூட்டைகள் திருவாரூரில் கிடங்கில் இருக்கின்றன. 15 லட்சம் மூட்டைகளை குடோனுக்கு கொண்டு சென்றபிறகே மீண்டும் நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளை அடுக்கலாம் என்றவர், டெல்டா மாவட்டங்களில் போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என்றார்.
ஒவ்வொரு நிலையங்களிலும் 600 மூட்டைகள் மட்டுமே நாள் ஒன்றுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், அதிமுக ஆட்சியில் ஒரு நாளைக்கு 1000 நெல்மூட்டைகள் கொள்செய்யப்பட்டது என்றவர், நெல் கொள்முதல் நிலையங்களில் தினமும் 600 மூட்டைகளுக்கு பதிலாக 1,000 மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், கொள்முதலின்போத 17சதவிகிதம் ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக கூறியவர், நெல்கொள்முதலுக்கான ஈரப்பதத்தை அதிகரிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். அதுபோல நெல் கொள்முதல் நிலையங்களில், சணல் மற்றும் சாக்கு பைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறினார்.