சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்க ரூ.460 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகள் நடைபெறுகிறது என தமிழக சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 4வது நாள் அமர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பேரவையின் கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அப்போது, சென்னை மக்களின் குடிநீர் திட்டம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் நேரு, சென்னைக்கு குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாகவும், மேலும், ரூ.460 கோடியில் பல்லாவரம் உள்ளிட்ட 18 பகுதிகளில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகள் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதன்முலம் , சுமார் 400 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 2027ல் நிறைவடைய வேண்டும் என்றவர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் முதற்கட்டமாக 2026 பிப். 15 முதல் 200 எம்.எல்.டி. தண்ணீர் வழங்கப்படும் என தெரிவித்தார்.