சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 4 நாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 4வது நாள் அமர்வு தொடங்கி உள்ளது. அதன்படி அக்டோபர் 14 ந்ததி தொடங்கிய கூட்டத்தொடர் இன்று ( அக்டோபர் 17ம் தேதி ) முடிவடைகிறது.

முதல்நாள் அமர்வு மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட ஒத்தி வைக்கப்பட்டது. 2வது நாள் மற்றும் 3வது நாள் அமர்வுகள் காரசாரமான விவாதங்கள், கரூர் சம்பவம், நிதிப்பிரச்சினை உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்த பேரவையில் விவாதிக்கப்பட்டன. மேலும், கூடுதல் மானியக் கோரிக்கை முன் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.
இதையடுத்து இன்று 4வது நாள் அமர்வு தொடங்கி உள்ளது. இன்றைய அமர்வில், இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். அதைத்தொடர்ந்து விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளிப்பார். அதுபோல அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாக்களும், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும்.