சென்னை; சென்னையில், இருந்து தென்மாவட்டங்களுக்கு இன்றுமுதல் 21ந்தேதி வரை முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது தெற்கு ரயில்வே. அத்துடன் ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டு சிறை  என்றும் எச்சரித்துள்ளது.

தீபாவளி சிறப்பு ரயில்களை அறிவித்ததுள்ளது தெற்கு ரயில்வேஇதற்கான முன்பதிவு நேற்று மாலை 4 மணிக்கு தொடங்குகியது. ரயில் புறப்படும் நேரம் பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே செய்து வருகிறது. சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல அதிக அளவில் சிறப்பு ரயில்களை இயக்குகிறது. மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல் போன்ற பெரிய ரயில் நிலையங்களில் அக்டோபர் 17  முதல் அக்டோபர் 21 வரை கூடுதல் பயணச்சீட்டு பதிவு சாளரங்கள், தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்களை விரைவாக இயக்க கூடுதல் ஊழியர்கள், ரயில் நிலையங்களில் தேவையில்லாத கூட்டத்தை தவிர்க்க நுழைவு வாயில்களில் தீவிர பயண சீட்டு பரிசோதனை ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் செல்ல சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர்.17, 20ல் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை சிறப்பு ரயில் இயக்கப்படும்.

நாளை, நாளை மறுநாள் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்.

அக்டோபர்.18, 21ம் தேதி மதுரையில் இருந்து தாம்பரத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இன்று (அக். 17)

▪️ தாம்பரம் – செங்கோட்டை எக்ஸ்பிரஸ்

▪️ எழும்பூர் – மதுரை முன்பதிவில்லா MEMU எக்ஸ்பிரஸ்

நாளை (அக். 18)

▪️ மதுரை – தாம்பரம் முன்பதிவில்லா MEMU எக்ஸ்பிரஸ்

▪️ எழும்பூர் – மதுரை முன்பதிவில்லா MEMU எக்ஸ்பிரஸ்

அக்டோபர் 20

▪️ செங்கோட்டை – தாம்பரம் எக்ஸ்பிரஸ்

அக்டோபர் 21

▪️ மதுரை – தாம்பரம் முன்பதிவில்லா MEMU எக்ஸ்பிரஸ்

இன்று தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இரவு 7.30 மணிக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  தாம்பரத்தில் புறப்பட்டு நாளை காலை 7.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.  அக்டோபர்.20ல் செங்கோட்டையில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இன்றும் நாளையும் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும். இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை, திருச்சி வழியாக மறுநாள் காலை 10.45க்கு மதுரை செல்லும்.

முன்பதிவில்லா பயணிகளை வரிசையாக ஏற்ற வேண்டும்

முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகளை வரிசையாக ஏற்றிவிட வேண்டும் என ரயில்வே எஸ்.பி. ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தி பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

அமிர்தா எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு

திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் திருவனந்தபுரத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக ராமேஸ்வரம் வரை அமிர்தா எக்ஸ்பிரஸ் இயக்கம்.

இன்று தாம்பரம்-கூடுவாஞ்சேரி சிறப்பு ரயில்

தீபாவளியை ஒட்டி பயணிகளின் வசதிக்காக இன்று தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே சிறப்பு ரயில். தாம்பரத்திலிருந்து இரவு 7.45 மணிக்கும், 7.53க்கும், 8,10க்கும் சிறப்பு ரயில் புறப்பட்டுச் செல்லும்.

காட்டாங்குளத்தூர் – தாம்பரம் சிறப்பு ரயில்

தீபாவளி முடிந்து சென்னை வரும் பயணிகளின் வசதிக்காக அக்.22ல் காட்டாங்குளத்தூர்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும். காட்டாங்குளத்தூரில் இருந்து அதிகாலை 4 மணி, 4.30 மணி, 5 மணி, 5.35 மணி, 6.25 மணிக்கும் தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கம்.

தாம்பரம் – காட்டாங்குளத்தூர் இடையே சிறப்பு ரயில்

பயணிகளின் வசதிக்காக அக்.22ல் தாம்பரம்- காட்டாங்குளத்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. காலை 5.40 மணிக்கு தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயில் புறப்பட்டு 6.10 மணிக்கு காட்டாங்குளத்தூர் சென்றடையும்.

அத்துடன், ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பயணச்சீட்டு பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், தமிழக ரயில்வே காவல்துறை பணியாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பாக பயணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வார்கள். பயணிகளின் பாதுகாப்பாக பயணத்தை உறுதி செய்ய பொதுமக்களின் ஒத்துழைப்பையும் ரயில்வே நிர்வாகம் நாடுகிறது. அந்த வகையில் ரயில்களில் பயணத்தின் போது ஆபத்தை விளைவிக்கும் பட்டாசுகள், வெடிப் பொருட்கள், மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

இதை மீறுபவர்கள் மீது ரயில்வே சட்டப்படி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். ரயில்களின் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்வதை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். எனவே பயணிகள் தங்களின் பாதுகாப்பையும் மற்றவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ரயில்வே சட்ட திட்டங்களை கடைப்பிடிக்கும்படி ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.