வெனிசுலாவுக்கு எதிரான ரகசிய சிஐஏ நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகாரம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலா சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மையமாக மாறியுள்ளதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, “போதைப்பொருள்-பயங்கரவாத” ஆட்சியை நடத்திவருவதாகவும், சிறைகளில் இருந்து கைதிகளை விடுவித்து அமெரிக்காவிற்கு அனுப்பியதாகவும் குற்றம் சாட்டும் அமெரிக்கா அந்நாட்டு கடற்பகுதியில் சுற்றித்திரியும் படகுகளில் போதைப் பொருள் இருப்பதாகக் கூறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் மதுரோவுக்கு எதிராக வெனிசுலாவில் இரகசிய நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் சிஐஏவை ரகசியமாக அங்கீகரித்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து நேரடியாக பதிலளிக்க மறுத்த டிரம்ப், தென் அமெரிக்க நாட்டில் நிலத்தில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என்று கூறப்படுபவர்களுக்கு எதிரான தாக்குதல்களை பரிசீலித்து வருவதாகவும் கூறினார்.
டிரம்பின் கருத்துக்கள் இடதுசாரி வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவின் கோபத்தைத் தூண்டியுள்ளது, அவர் “சிஐஏவால் திட்டமிடப்பட்ட சதித்திட்டங்களை” கண்டித்தும், கரீபியன் கடற்பகுதியில் புதிதாக ஒரு போதைப்பொருள் படகின் மீது அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து இராணுவப் பயிற்சிகளுக்கு உத்தரவிட்டார்.