சென்னை: பேரவையின் இன்றைய கேள்வி நேரத்தின்  உறுப்பினர்களின் பல கேள்விகளுக்கு அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, எ.வ.வேலு  பதில் அளித்தனர்.

தமிழக சட்டப்பேரவையின் 3வது நாள் அமர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.இன்றைய கூட்டத்தொடருக்கு கிட்னி ஜாக்கிரதை என்ற பேட்ஜ்  அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வந்திருந்தனர். அதுபோல, வந்த  அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து வருகை தந்தனர்.

இதையடுத்து பேரவை அமர்வு வழக்கமான நடைமுறைப்படி திருக்குறள் வாசித்து தொடங்கியது.  முதலில் கேள்வி நேரம் தொடங்கியது. இதில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

வாசு தேவன் பட்டு, அல்லியந்தல் உள்ளிட்ட ஏரிகளை இணைக்க உறுப்பினர் கோரிக்கை வைத்தனர்.

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தான் மதுரைக்கு விடிவு காலம் வந்தது. கோரிப்பாளையம் பாலத்தின் பணிகளை ஜனவரி மாதம் திறக்கலாம் என்று முடிவு செய்து தொடர்ந்து பணிகளை செய்து வருகிறோம். அடுத்ததாக அப்பல்லோ மருத்துவமனை பாலம் வேலையும் நடைபெற்று வருகிறது. இந்த பாலங்கள் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்படும் என்றார்.

மதுரை மாவட்டம் பாலம் வேலை எப்போது முடியும்? செல்லூர் ராஜு கேள்விக்கு எ.வ.வேலு பதில் அளித்தார்.  தொடர்ந்து,  பதிலளித்த துரைமுருகன் இந்த ஏரிகளில் நீர் ஆதாரம் இருந்தாலும் வனதுறையில் இருந்து பத்து ஏக்கர் நிலம் எடுக்க வேண்டியது இருக்கும். அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் இது பற்றி பேசுவோம் என்றார்.

மதுரை மாவட்டம் விரகனூர் அணை சுற்றுலாத் தளத்தை புனரமைப்பது தொடர்பாக  அதிமுக எம்எல்ஏ, ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அந்த கோரிக்கை எழுதி கொடுக்கிறேன் என்று கூறினார்.

நிலக்கோட்டை பேருந்து நிலையம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, நிலக்கோட்டை பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் சரியாக இருக்கின்றது என்று அதிகாரிகள் தகவல் சொன்னார்கள். பைபாஸ் சாலையில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பைசாஸ் சாலையில் அரசுக்கு சொந்தமான இடம் இருக்குமானால் அதை பெற்று கட்டிடம் கட்டி தருகிறோம் என்றார்.

உண்ணாமலை பேரூராட்சி ரயில்வே கேட் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்   எ.வ.வேலு,  விளவங்கோடு உண்ணாமலை பேரூராட்சி ரயில்வே கேட் 15பி மேம்பால பணி 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது என்று தாரகை கதபட் கேள்வி எழுப்பினார். அதற்கு, மத்திய மாநில அரசுகள் 50 சதவிகிதம் நிதி ஒதுக்கி பாலம் கட்டுகின்றன, முழு தொகையும் மாநில அரசே செலவிட்டு பாலம் கட்ட முதல்வர் அனுமதி தேவை. கோரிக்கையை எழுத்துபூர்வமாக வழங்குங்கள் என்று கூறினார்.