சென்னை: கரூர் சம்பவம் குறித்து இன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றதுடன், சபாநாயகரின் நடத்தைக்கு எதிராக, எடப்பாடி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின், அதிமுக – தவெக கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரின் 2வது நாள் அமர்வு இன்று நடைபெற்றது. இன்றைய அமர்வில் கேள்வி நேரம் முடிந்ததும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான தீர்மானத்தின்மீது காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. இந்த சம்பவத்துக்கு காரணம் என அரசையும், காவல்துறையையும் கடுமையாக விமர்சித்ததுடன், ஏராளமான கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு முதல்வர் நீண்ட விளக்கம் அளித்ததுடன், அவ்வப்போது அமைச்சர்களும், சபாநயகரும் பதில் அளித்தனர். இந்த நிலையில், விவாதத்தின்போது, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் பேசினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்காத சபாநாயகர் அப்பாவு, ஓரவஞ்சனை செய்தாக குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் இருக்கை முன்பு, அ.தி.மு.க. எம்எல்ஏக்களுடன் அமர்ந்து தர்னா செய்தார். பின்னர் அதிமுக எம்எல்ஏக்கள் அவையில் இருநது வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கூட்டணிக்காக தான் அ.தி.மு.க. இப்படி செய்கின்றனர் என்று விமர்சித்ததுடன், அவர்கள் என்ன கூட்டணி அமைத்தாலும் அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று கூறியதுடன், அதிமுக- தவெக கூட்டணி அமைந்தாலும் சரி, எந்த மெகா கூட்டணி அமைத்தாலும் பயன் தராது என்றார். அவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர் என கூறினார்.
மேலும், அதிமுகவினர், பேரவையில் எப்படியாவது கலவரம் செய்ய வேண்டும், வெளிநடப்பு செய்ய வேண்டும் என திட்டமிட்டு வந்துள்ளனர் என விமர்சித்தவர், தங்கள் கட்சியினர் பாதிக்கப்பட்டிருந்தால் கூட இப்படி ஒரு போர்க்குரல் அ.தி.மு.க.வினரிடம் இருந்து வருமா எனத் தெரியவில்லை, கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் இன்று அப்படி பேசினர்; ஏனென்றால் அவர்களுக்கு கூட்டணி சரிவர அமையவில்லை; மெகா கூட்டணி, மகா கூட்டணி என்றெல்லாம் சொல்கின்றனர்; அப்படியே கூட்டணி அமைத்தாலும் மக்கள் சரியான பாடத்தை வழங்குவர் என தெரிவித்தார்.
கரூர் சம்பவத்துக்கு விஜய் லேட்டாக வந்ததே காரணம்! பேரவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு…
https://patrikai.com/heated-debate-in-the-legislative-assembly-regarding-the-karur-stampede-incident-minister-m-subramanian-responds-regarding-the-post-mortem/