சென்னை : சட்டப்பேரவையில் இன்று காலை கேள்வி நேரத்தின்போத  உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள்  பதில் அளித்தனர். அதன்படி, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் வேலு உள்பட பலர் பதில் அளித்தனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் கேள்வி நேரம் தொடங்கியது. சட்டப்பேரவைக்கு கையில் கருப்பு கைப்பட்டை அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வருகை புரிந்துள்ளனர். அவர்களை சபாநாயகர் மற்றும் அமைச்சர் ரகுபதி கிண்டலடித்தனர்.

இதையடுத்து,  கோபிச்செட்டி பாளையத்தில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று அதிமுக எம்எல் ஏ  செங்கோட்டையன் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பதில் கூறிய அமைச்சர் எ.வ.வேலு. உறுப்பினரின் கேள்வி குறித்து முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பணிகள் நடைபெறும் என்றவர்,   புறவழிச்சாலைக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். பழைய மாளிகையை புதுப்பிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

மதுரை சுற்றுலா மாளிகையை புதுப்பிப்பது தொடர்பாக எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்விக்கு, மதுரையில் புதிய சுற்றுலா மாளிகை கட்டப்பட்டு வருவதால் பழைய மாளிகையை புதுப்பிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார்.

தமிழ்நாட்டில் புதிய சிறைச்சாலைகள் அமைக்கும் திட்டம் உள்ளதா என பாமக எம்எல்ஏ அருள் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கூறிய அமைச்சர் ரகுபதி ,  தமிழ்நாட்டில் புதிய சிறைச்சாலை கட்டும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றவர்,  மாவட்ட சிறைச்சாலைகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. சேலம் மத்திய சிறை அருகேவுள்ள கால்வாய் தூர்வாரப்படும் என பதிலளித்தார்.

அதுபோல நீர்வத்துறை தொடர்பான கேள்வியின்போது, பதில் அளிக்க அமைச்சர் துரைமுருகன் முற்பட்டபோது, சபாநாயகர் அவரை அமர்ந்தே பதில் அளிக்கும்படி கூறினார். ஆனால், அதை ஏற்க மறுத்த துரைமுருகன், உறுப்பினரின் கேள்விக்கு ஆங்கிலத்தில் பதில் அளித்தார்.