சென்னை: திருவான்மியூர் அருகே கொலை வழக்கில், ஜாமினில் வந்த பதிவேடு குற்றவாளியான திமுக பிரமுகர் கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது முகம் முழுமையாக வெட்டி சிதைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அடையாரை அடுத்த திருவான்மியூர் பகுதியில் வசித்து வரும், , திமுக பிரமுகரும் ரியல் எஸ்டேட் அதிபருமான குணா (எ) குணசேகரன் ஆறு பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கொலை வழக்கில், சிறைக்கு சென்ற குணசேகரன் சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தநிலையில், கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. இது சென்னை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் ஏற்கனவே கஞ்சா விற்பனை படுஜோராக நடைபெற்று வரும் நிலையில், அவ்வப்போது கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. யாரும் குறை சொல்ல முடியாது அரசு என முதல்வர் ஸ்டாலின் கூறி வந்தாலும், நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. கஞ்சா விற்பது குறித்து தகவல் கொடுப்பவர்களே பாதிக்கப்படும் நிலை உள்ளது.
கொலை செய்யப்பட்ட குணசேகரன் சென்னை கொட்டிவாக்கத்தில் வசித்து வந்தவர். இவரைது வயது 45.குணா என்று அழைக்கப்படும் குணசேகரன் திமுக பிரமுகர்8என்று கூறப்படுகிறது. இவர் அரசியல் ஆதரவுடன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். திமுகவின் முக்கிய பிரமுகருடன் தொடர்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் மீது பல வழக்குகள் உள்ளன. இதனால், இவரது பெயர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் இருந்து வருகிறார். இவர் மீது, 2024ம் ஆண்டு நடைபெற்ற வழக்கறிஞர் கவுதம் என்பவரின் கொலை வழக்கில் இவர் குற்றவாளியாக சிறையில் அடைப்பட்டிருந்தார். இவர் சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்திருந்தார்.
சம்பவத்தன்று (அக்டோபர் 13) மாலை சென்னை அடையாறு இந்திரா நகர் பெட்ரோல் பங்க் அருகே தனது நண்பருடன் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென குணசேகரனை வழிமறித்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குணசேகரன் அவர்களிடம் தப்பித்து அடையார் பிரதான சாலையில் ஓடியுள்ளார். ஆனாலும் அந்த கும்பல் குணசேகரனை விடாமல் ஓட ஓட துரத்தி சென்று அரிவாளால் கொடூரமாக சரமாரியாக வெட்டியது.
இதில் முகம் முழுவதும் சிதைந்த நிலையில் குணசேகரன் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். ஆனால் குணாவின் நண்பர் அவர்களிடம் தப்பித்தார்.
இதுகுறித்து தகவலறிந்து அடையாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குணசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பழிக்கு பழியாக இந்த கொலை நடைபெற்றது தெரியவந்துள்ளது.
விசாரணையில், ர் வழக்கறிஞர் கவுதம் என்பவரை, கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தேதி இரவு திருவான்மியூர் திருவள்ளுவர் சாலையில் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். குணாவின் மகளை அதேத பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலித்து வந்ததாகவும் அந்த இளைஞரை குணா மிரட்டியததாகவும் கூறப்படுகிறது. அந்த இளைஞருக்கு ஆதரவாக செயல்பட்டதால் ஆத்திரத்தில் வழக்கறிஞர் கவுதம் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரும், திமுக பிரமுகருமான குணசேகரன், கமலேஷ், நித்தியானந்த், பார்த்திபன், சதீஷ் ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் சிறையில் இருந்து வெளிவந்த நிலையில் குணசேகரன் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் தனுஷ் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 7 பேரை தேடி வருகின்றனர்.