சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்கு கிறது. ஏற்கனவே தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் சென்னை திரும்பும் வகையில் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பொதுமக்கள் தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்று, மீண்டும் திரும்பி வரும் வகையில், தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. வரும் 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக கூறினார். அதன்படி, சென்னையில் இருந்து மட்டும் மற்ற ஊர்களுக்கு 14,268 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறியிருந்தார்.
இநத் நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்ப 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி,
அக். 21, அக். 22ம் தேதிகளில் நெல்லை – செங்கல்பட்டு இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல்.
அக். 19ம் தேதி போத்தனூர் – சென்னை சென்ட்ரலுக்கும், அக். 20ம் தேதி சென்னை – மங்களூருவுக்கும் ஒரு சிறப்பு ரயில் இயக்கம்.
அக்.21ம் தேதி திருவனந்தபுரம் – எழும்பூருக்கும், 22ம் தேதி மறு மார்க்கத்திலும் ஒரு சிறப்பு ரயில்கள் இயக்கம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
https://patrikai.com/southern-railway-announces-special-trains-for-diwali-and-dasara-festival-advance-bookings-open-today/