சென்னை: நடிகை திரிஷா திருமணம் குறித்து சமுக வலைதளங்களில் பல்வேறு  வதந்திகள் பரவி வரும் நிலையில், அதற்கு பதில் அளிக்கும் வகையில்,   அப்படியே தனது தேனிலவையும் திட்டமிடுங்கள் என்று நக்கலாக பதிவிட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் திரிஷா. இவர் தவெக தலைவரான நடிகர் விஜய் உடன் நெருக்கமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், தற்போது 42 வயதாகும் இவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.  இவர் நடிப்பில் வெளியான கில்லி, சாமி, வின்னைத்தாண்டி வருவாயா, 96, பொன்னியின் செல்வன் உள்பட ஏராளமான  படங்களின் மூலம் 22 ஆண்டுகளாக தமிழ்நாடு திரையுலகை கலக்கி வருகிறார். பல லட்சக்கணக்கான  ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் திரிஷா தென்னிந்திய சினிமாவின் பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதுபோலவே அவரது திருமணம் குறித்தும் அவ்வப்போது வதந்திகள் பரவி வருகின்றன.   ஆனால், திரிஷா தரப்பில் இருந்து உறுதியாக எதுவும் இதுவரை கூறப்படவில்லை.

இந்த நிலையில், நடிகை திரிஷாவுக்கு திருமணம் செய்ய அவருடைய குடும்பம் முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக  வரன் பார்த்து வருவதாகவும் சமுக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது.  மேலும் திரிஷாவுக்கு  சண்டிகரை சேர்ந்த தொழிலதிபர் மாப்பிளையாக போகிறார் என்றும் தகவல்கள் தெரிவித்தன.  ஆனால்,  இந்த செய்தி குறித்து திரிஷா தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை. இருந்தாலும் திரிஷா திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் ஒவ்வொரு வரும், அவர்களுக்கு பிடித்தமாதிரி கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். சிலர் திரிஷாவை ட்ரோல் செய்தனர்.

இதையடுத்து, தனது திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திரிஷா தனது  இன்ஸ்டா சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,   “என்னுடைய வாழ்க்கையை பிறர் திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எனது தேனிலவையும் அவர்களே திட்டமிட்டு கொடுப்பார்கள் என காத்திருக்கிறேன்!” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.