வாஷிங்டன்: தனக்கு வழங்கப்பட்ட அமைதிக்கானநோபல் பரிசை டிரம்புக்கு அர்ப்பணிக்கிறேன் என இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுவேலாவின் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்படும் என நோபல் பரிசு தெரிவுக் குழு அறிவித்துள்ளது. வெனிசுவேலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காக போராடியதற்காக, மரியா கொரினாவுக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுவேலாவில் ஜனநாயகத்துக்காகத் தொடர்ந்து போராடி தற்போது தலைமறைவாக இருப்பவர் மரியா கொரினா மச்சாடோ என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த சில மாதங்களாக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வந்தார். தனது முயற்சியால், பல போர்களை நிறுதத்தப்பட்டு உள்ளன. எனவே, அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது ஆதரவாளர்களும், ஆதரவு நாடுகளான பாகிஸ்தான் போன்ற நாடுகளும் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தன.
ஆனால், நான்கு அமெரிக்க அதிபர்கள் நோபல் பரிசு வென்றிருக்கும் நிலையில், டிரம்பும் நோபல் பரிசு லிஸ்டில் ஐந்தாவது அதிபராக இணையலாம் என ஆசைப்பட்ட நிலையில், அவரது ஆசையில் மண் விழுந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதிக்குள் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட 339 பேரில் டொனால்ட் டிரம்ப் பெயர் இடம்பெறவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், உலகம் முழுக்க சர்வாதிகாரம் என்ற இருள் விலகிவரும் நிலையில், அதற்காகப் போராடி வரும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதே சிறப்பானதாக இருக்கும் என்று பரிசை அறிவித்த நார்வே நோபல் குழு தெரிவித்துள்ளது. மேலும், ஜனநாயகத்துக்காகப் போராடி வருபவர்களுக்கே விருது என்றும், சர்வாதிகாரத்தை நம்பக் கூடியவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாது என்பதையும்தான் இந்தக் கருத்து தெளிவுபடுத்துவ தாகவும் கூறப்படுகிறது. நார்வே நோபல் குழுதான், நோபல் பரிசு பெறுபவர்களைத் தேர்வு செய்கிறது. இந்தக் குழுவை நார்வே நாடாளுமன்றமே நியமனம் செய்கிறது. அதன்படியே இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார். நோபல் பரிசு அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த மச்சோடோ, “நான் ஒரு பெரிய இயக்கத்தின் ஒரு பகுதி மட்டுமே. நான் பணிவுடன் இருக்கிறேன், நன்றியுள்ளவனாக இருக்கிறேன், பெருமைப்படுகிறேன்.” என்று கூறினார்.
நோபல் பரிசு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ள, டிரம்பின் அதிருப்தி மனநிலையை அவரது அரசு அலுவலகமான வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. தெரிவித்துள்ளது. அமைதியை விட அரசியலுக்கு முக்கியத்துவம் என்பதை மீண்டும் ஒருமுறை நோபல் கமிட்டி நிரூபித்துள்ளது என வெள்ளை மாளிகை காட்டமாக விமர்சனம் செய்துள்ளது.
இந்த நிலையில் எனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் அர்ப்பணிக்கிறேன் என நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிர்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ கூறி உள்ளார்.
எனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலாவின் துன்பப்படும் மக்களுக்கும், எனக்கு நோக்கத்திற்காக நோக்கத்திற்கு அவர் அளித்த தீர்க்கமான ஆதரவிற்காக ஜனாதிபதி டிரம்பிற்கும் அர்ப்பணிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.