டெல்லி: கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம்,  தமிழ்நாடு அரசுக்கும், சென்னை உயர்நீதிமன்றத்தையும் கடுமையாக சாடி உள்ளது. அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது.

ஒரேநேரத்தில் எப்படி இரு நீதிமன்றங்களில் விசாரணை நடத்தப்பட்டது

எஸ்ஐடி விசாரணைக்கு எப்படி உத்தரவிடப்பட்டது?

ரோடுஷோ வழக்கு எப்படி கிரிமினல் வழக்கானது?

விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காவிட்டால் என்ன? என்ன தவறு?

விஜயின் தலைமைப் பண்பு குறித்து எதற்காக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது?

4 மணி நேரத்திற்குள் அனைவருக்கும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதா? அவ்வளவு மேஜைகள் அங்கு உள்ளதா?

என அடுக்கடுக்கான கேள்விகளை தமிழ்நாடு அரசுக்கு முன்வைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து கரூர் துயரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. விரிவான பதில்மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தவெக தலைவர் விஜய் கடந்த 27 ஆம் தேதி கரூரில்  பங்​கேற்ற ப​ரப்புரைக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை​மை​யில் சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைத்து உத்​தர​விட்​டது.

இந்த உத்​தரவை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தவெக சார்​பில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. அந்த மனுவில் கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு வழிவகுத்த காரணங்கள் மற்றும் சமூக விரோதிகளின் தொடர்பு குறித்து உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. விஜயின் தலைமைப் பண்பு குறித்த உயர்நீதிமன்ற கருத்துகளை நீக்க வேண்டும் எனவும் முறையிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.  வழக்கின்  விசாரணையின்போது தவெக தரப்பும், தமிழ்நாடு அரசு தரப்பிலும் காரசாரமாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

த.வெ.க தரப்பில் ஆஜரான  உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோபால் சுப்ரமணியம், ஆர்யமா சுந்தரம் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். அப்போது, தமிழ்நாடு போலீசாரை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டுள்ள எஸ்.ஐ.டி மூலம் உண்மை வெளிவராது தமிழக வெற்றி கழகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம் என த.வெ.க தெரிவித்தது.

மேலும்,  “கரூரில் கூட்ட நெரிசலுக்கு பிறகு விஜய் தப்பி ஓடிவிட்டதாக உயர் நீதிமன்ற விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர் மனுதாரராக இல்லாத போது எதற்காக எங்களைப் பற்றி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவிக்க வேண்டும்.

வழக்கிற்கு தொடர்பே இல்லாத வகையில் விஜயின் தலைமைப் பண்பு குறித்து எல்லாம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு காவல்துறை கட்டாயப்படுத்தியதால்தான் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க த.வெ.க நிர்வாகிகளை அனுமதிக்கவில்லை” என்று த.வெ.க வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தவெக நிர்வாகிகளை இதுவரை காவல்துறை அனுமதிக்கவில்லை என்றும், விஜய் மற்றும் கட்சியை எதிர்மனுதாரராக சேர்க்காமல் அவதூறு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் அஸ்ரா கார் சிறந்த அதிகாரி; அவர் சி.பி.ஐ-யில் பணியாற்றியுள்ளார். அவரை பரிந்துரைத்தது உயர்நீதிமன்றம் தான் என்றும்,  விஜய் தாமதமாக வந்ததே கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு காரணம் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக விசாரணைக்கு ஏற்றது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிள்ளது.

இதற்கு 41 பேர் உயிரிழந்து உள்ளதால் தான் சென்னை உயர்நீதிமன்ற தலையிட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் பாதிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு விசாரித்த வழக்கை சென்னையில் தனி நீதிபதியும் விசாரணைக்கு எடுத்தது ஏன் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தனி நீதிபதி தலையிட்டது தவறு என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.  ஒரே நாளில் சென்னை மற்றும் மதுரை நீதிமன்றங்களில் வெவ்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது எப்படி? என்றும் சாடியது.

மேலும், தமிழ்நாடு அரசு சார்பில்,  தவெக நிகழ்வால் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சென்று  இதுவரை சந்திக்கவில்லை  என்று கூறப்பட்டது.

இதற்கு பதில் கூறிய நீதிபதிகள், அவர் சந்திக்கவில்லை என்றால் என்ன என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.  மேலும், தேர்தல் பிரசாரம், ரோடு ஷோ வழிகாட்டுதல்களுக்கான வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் எப்படி கிரிமினல் வழக்கானது என்று கேள்வி எழுப்பியதும், எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது என்படி என்றதுடன்,    இந்த வழக்கில், விஜய் பற்றிய கருத்துக்களை உயர்நீதிமன்றம் முன்வைத்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியது.

பின்னர்,  தவெக தொடர்பான வழக்கில் மற்றொரு மனுதாரரான பிரபாகரன் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. கரூர் பரப்புரை கூடத்தில் மக்கள் எவ்வளவு பேர் கூடுவார் கள் என காவல்துறை மற்றும் உளவுத்துறை கணிக்க தவறிவிட்டனர். கடந்த ஜனவரி மாதம் அதிமுக அதே பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதிக்கவில்லை. இடையூறாக இருக்கும் என்பதால் அந்த பகுதியில் அனுமதி கிடையாது என காவல்துறை கூறியது. ஆனால் செப்டம்பர் மாதம் அதேபகுதியில் அதிமுகவிற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தை பொருத்தவரை முழு தோல்வி தமிழக காவல்துறை மீது தான் உள்ளது என்று தனது வாதத்தை முன் வைத்தார். அதிமுகவுக்கு அதிக அளவில் கூட்டம் வரும் என்றால் அதே போல் ஒரு கூட்டம் தான் வரும் தவெகவுக்கு வரும் என்று தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள் தரப்பில் இந்த விவகாரத்தில் எங்களால் சென்னை உயர்நீதி மன்றத்தின் செயல்பாட்டை புரிந்து கொள்ளவே முடியவில்லை. தினேஷ்குமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் அவரது மனுவில் என்ன கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது என்பதை சென்னை உயர்நீதிமன்றம் பதில் அளிக்கவே இல்லை. அதற்குத்தான் அவர்கள் முன்னுரிமை அளித்திருக்க வேண்டும்.
ஆனால், மனுவில் கோரிக்கையாக வைக்கப்படாத ஒன்றை சென்னை உயர்நீதிமன்றம் தனது கவனத்திற்கு எடுத்துக் கொண்டிருக்கிறது. நிலையான வழிகாட்டு முறை கோரிதான் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அதுதான் அவருக்கு பிரதான கோரிக்கை யாக இருந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் அதனை கருத்தில் கொள்ளாமல் அவரது கோரிக்கைக்கு சம்பந்தமே இல்லாமல் ஒன்றை உத்தரவாக பிறப்பித்து இருக்கிறது. இது ஏன் என்று எங்களுக்கு புரியவில்லை.

சென்னை உயர்நீதிமன்றம் ஒரு விமர்சனத்தை முன்வைத்து இருக்கிறது. சில கருத்துக்களையும் கூறியிருக்கிறது. கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்பது அவர்களுடைய கோரிக்கையாக இருந்தது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் இதில் மற்றொரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இது எங்களுக்கு நெருடலாகவே இருக்கிறது. நிலையான வழிபாட்டு நெறிமுறை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த கோரிக்கையில் சிறப்பு புலனாய்வு குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்திருக்கிறது. நாம் ஏதாவது ஒரு இடத்தில் நமது எல்லைக்கு உட்பட்டு நடந்திருக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்

இதற்கு பதில் அளித்த தமிழ்நாடு தரப்பு அரசு வழக்கறிஞர் வில்சன் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டிருக்கிறது. மனு தாக்கல் செய்வதற்கு முன்பாகவே இந்த கோரிக்கை அளிக்கப்பட்டது என பதிலளித்தார்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள் பிரேத பரிசோதனை குறித்தும் கேள்வி எழுப்பினர். 4 மணி நேரத்திற்குள் அனைவருக்கும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதா? அங்கு பிரத பரிசோதனை செய்வதற்கான எத்தனை மேஜைகள் இருந்தன’’ என கேள்வி எழுப்பினர்.

இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில், 27ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. அந்த இடத்தில் மிகப்பெரிய அளவில் பொதுமக்களுடைய எழுச்சியும் கூக்குரலும் இருந்தது. உயிரிழந்த வர்களின் உறவினர்கள் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களது உடல்களை உடனே வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்கள். எனவே மாவட்ட ஆட்சியர் தான் உடல் பரிசோதனை செய்ய அனுமதி அளித்தார்.

இது தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்கிறோம். எங்களுக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும் பதில் அளிக்க வேண்டிய நிலைமை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் காலணி வீசப்பட்டது லத்தி சார்ஜ் வைக்கப்பட்டது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக அரசு மீது குற்றச்சாட்டுகளை நாங்கள் மறுக்கிறோம். இது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்.

மரணம் அடைந்தவர்களின் உறவினர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டதாலேயே உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்தும் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சம்பவம் நடந்த அன்று முதலமைச்சர் உடனடியாக கரூர் புறப்பட்டார். அப்போதுதான் முதலமைச்சரிடம் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உறவினர்களின் உடலை உடனே ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்கள். அதனால் தான் உடனடியாக பிரேத பரிசோதனை செய்தோம். மாவட்ட ஆட்சியரும் அனுமதி அளித்தார் என்று தமிழக அரசு வழக்கறிஞர் தரப்பில் கூறப்பட்டது.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள் அனுமதி அளித்ததில் எங்களுக்கு எந்த விதமான கேள்வியும் எழவில்லை. உடல் பிரேத பரிசோதனை செய்யக்கூடிய நிபுணர்கள் தான் இதனை செய்தார்களா? என்கிற சந்தேகம் எழுகிறது என தெரிவித்தனர்.

அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் அருகாமையில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப் பட்டார்கள். விரைவாக செயல்பட்டதற்காக ஒரு குற்றச்சாட்டை நாங்கள் முதல்முறையாக எதிர்கொள்கிறோம் ’’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அரசு தரப்பு அவகாசம் கோரியது. அதற்கு அவகாசம் வழங்கிய உச்சநீதிமன்றம் தற்போது இந்த வழக்கை ஒத்தி வைத்தது.