சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை மருத்துவ பயனாளிகள் அல்லது மருத்துவ பயனாளர்கள் என்று அழைக்க வேண்டும் என தமிழநாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் இனி ‘நோயாளி’ இல்லை: ‘மருத்துவப் பயனாளிகள்’ என்று அழைக்கப்படுவர்  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  இதுதொடர்பாக,   அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு உயர் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த  தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு மருத்துவத் துறையில் ஒரு முக்கியமான மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மருத்துவ சேவைகளை நாடி மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களிடம் வருகின்ற மக்களை இனிமேல் “நோயாளிகள்” (Patients) என அல்லாமல் “மருத்துவப் பயனாளிகள்” அல்லது “மருத்துவப் பயனாளர்கள்” (Medical Beneficiaries) என அழைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மருத்துவர்களையும். மருத்துவமனைகளையும் நாடி வருகின்றவர்களை நோயாளிகள்” என அழைப்பதற்கு பதிலாக இனிவருங்காலங்களில் மருத்துவப் பயனாளிகள்/மருத்துவப் பயனாளர்கள்” எனும் சொல்லை பயன்படுத்த வேண்டும் என அரசு ஆணையிடுகிறது “ என தெரிவிக்கப்பட்டுள்ளது.