சென்னை: கரூர் கூட்ட நெரிசல், அதனால் 41 பேர் பலியான சம்பவம் குறித்து விமர்சித்த நேதாஜி மக்கள் கட்சி தலைவர் வரதராஜனை போலீசார் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செப்டம்பர் 27ந்தேதி அன்று கரூா் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொண்டாா். இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தவெக தொண்டா்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 போ் உயிரிழந்தனா். 60 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க இரவோடு இரவாக தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபா் ஆணையத்தை அமைத்தது. மேலும், இரவே முதல்வர் ஸ்டாலின் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தும், இறந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார். மேலும் ஒரே இரவில் 30க்கும் மேற்பட்டவர்களின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவு பிறப்பித்தார். விசாரணையின் போது தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு தலைமை பண்பு இல்லை’என கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தவெகவினர், அதிமுகவினர், பாஜகவினர் திமுக அரசை குற்றம் சாட்டி வருகின்றனர். . இதற்கு திமுக அரசு மறுப்புதெரிவித்து வருவதுடன், திமுக கூட்டணி கட்சியினர் தவெகமீது கடுமையாக சாடி வருகின்றனர். இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர். மேலும் இந்த நிகழ்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்களையும் அரசு கைதுரு செய்து வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை கரூர் சம்பவம் குறித்து விமர்சித்தவர்களை, பொய்யான கருத்துக்களை பரப்பியதாக கூறி, கைது செய்து வருவதுடன், 25 சமூக வலைதளங்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதில் முக்கியமானவர்கள், பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் மாரிதாஸ். ஆனால், இவர்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும், தேவைப்படும் போது மீண்டும் போலீசார் ஆஜராகும்படி கூறியிருந்தனர்.
அதேநேரத்தில் சமூக வலைதளங்களில் நீதிபதி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக நான்கு பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அதன்படி நீதிபதி செந்தில்குமார் குறித்து அவதூறாக பேசியதாக நேதாஜி மக்கள் கட்சி தலைவர் வரதராஜனை போலீசார் கைது செய்துள்ளனர்.