கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு விஜய் தலா ரூ. 1 கோடி நிவாரணத் தொகை வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27ஆம் தேதி சனிக்கிழமை இரவு தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொண்டாா். இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தவெக தொண்டா்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 போ் உயிரிழந்தனா். 60 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சோக சம்பவம் குறித்து மாறுபட்ட கருத்துக்களும், வீடியோக்களும் வெளியாகி வரும் நிலையில், அவற்றை முடக்க தமிழ்நாடு அரசு எடுத்து வரும் கைது நடவடிக்கை பேசும் பொருளாக மாறி உள்ளது.
இதற்கிடையில், தவெக தரப்பில், கரூரு உயிரிழப்பு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுமீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி, கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்திற்கு விஜய் தலா ரூ. 1 கோடி வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும், உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு தலா ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் என்றும், இந்த , வழக்கை சிபிசிக்கு (CB-CID) மாற்ற வேண்டும், அத்துடன் காவல்துறை, மாவட்ட நிர்வாகம், மின்சாரத் துறை மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.