ரூ.60 கோடி மோசடி வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) முன் ஆஜரானார்கள்.

கடன் மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தில் ஒரு தொழிலதிபரிடம் ₹60 கோடி மோசடி செய்ததாக ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஜூஹு காவல் நிலையத்தில் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா உட்பட ஐந்து பேரிடம் சுமார் நான்கரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 5 ஆம் தேதி, இதே வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டி-ராஜ் குந்த்ராவுக்கு மும்பை காவல்துறை லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

தம்பதியினர் அடிக்கடி சர்வதேச அளவில் பயணம் செய்ததால், நகர காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவால் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு நபர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க அல்லது அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.