டெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சபரிமலை அய்யப்பனை தரிசிக்க கேரள மாநிலம் வருகை தருகிறார். இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 17-ந்தேதி திறக்கப்படுகிறது. 5 நாட்கள் நடை திறந்திருக்கும். இந்த நிலையில், ஐப்பசி மாத பூஜையில் கலந்துகொள்ள . ஐப்பசி மாத பூஜையின் இறுதி நாளான 22-ந்தேதியே ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வர உள்ளார். அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு 22-ந்தேதி இரவே சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கு வருகிறார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடா்பாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மாநில தேவஸ்வம் துறை அமைச்சா் வி.என்.வாசவன் செய்தியாளா்களை சந்தித்து , குடியரசு தலைவர் வருகையை உறுதிப்படுத்தினார். மேலுமை, அக்.22-ஆம் தேதி மாலை சபரிமலை கோயிலில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வழிபட உள்ளது குறித்து மாநில அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வழிபாட்டை முடித்த பின்னா், அவா் திருவனந்தபுரம் வருவாா்.
இந்தப் பயணத்தின்போது கோட்டயம் மாவட்டம் பாலாவில் உள்ள புனித தாமஸ் கல்லூரியின் பவள விழாவிலும் குடியரசு தலைவர் பங்கேற்க உள்ளாா். அவரை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தாா்.
ஐப்பசி மாத பூஜையையொட்டி அக்.18 முதல் அக்.22 வரை, பக்தா்கள் வழிபாட்டுக்காக சபரிமலை கோயில் திறக்கப்பட்டிருக்கும்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மே மாதம் சபரிமலைக்கு வருவதாக இருந்தது. ஆனால், அப்போது அவரால் வர முடியவில்லை. இந்த நிலையில், அவர் இந்த மாதம் வருகை தர உள்ளார். இதற்காக அவர் விமானம் மூலமாக வருகிற 22-ந்தேதி மதியம் கொச்சி வருகிறார். அங்கிருந்து நிலக்கல்லுக்கு வரும் அவர், பின்பு பம்பைக்கு சென்று, அங்கிருந்து சன்னிதானத்துக்கு செல்கிறார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 24-ந்தேதி வரை கேரளாவில் இருப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஐப்பசி மாதாந்திர பூஜையில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. மேலும் ஜனாதிபதி வருகை தரும் 22-ந்தேதி பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிகிறது. ஆனால் அது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.